சச்சின் நண்பர்; பல கோடி சொத்துக்கள்: ஆரம்பகால வினோத் காம்ப்ளி தெரியுமா?

சச்சின் டெண்டுல்கரின் ஆரம்பகால நண்பரும்; இந்திய கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளியின் தற்போதைய நிலை பலரையும் அதிர்ச்சிக் கொள்ளாக்கி உள்ளது.

Published on: December 7, 2024 at 3:32 pm

Vinod Kambli Net worth | இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத வீரராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர் வினோத் காம்ப்ளி. சச்சின் டெண்டுல்கரின் இளமை கால நண்பர் ஆன இவர், தற்போது மிகவும் நொடிந்து போய் காணப்படுகிறார்.

1990களில் மிகவும் பரபரப்பான கிரிக்கெட் வீரராக இருந்த வினோத் காம்ப்ளிக்கு தற்போது என்ன ஆனது? தனது குருநாதர் அச்சிரைக்கர் விழாவில் ஏன் அவ்வாறு காணப்பட்டார்? சச்சின் டெண்டுல்கரை பார்த்ததும் அவர் கண் கலங்கியது ஏன் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் தற்போது ஒன்றும் பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

நிதி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வினோத் காம்ப்ளி தற்போது மிகவும் பலவீனமாக உள்ளார். அவருக்கு உடலில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படுகிறது. கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கிய போது வினோத் காம்ப்ளி மதுவுக்கு அடிமையானார் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அவரால் நடக்கக்கூட முடியவில்லை.

அவரின் நிலையைப் பார்த்து 1983 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர். அதற்கு அவர்கள் நிபந்தனை ஒன்றையும் விதித்துள்ளனர். அது வினோத் காம்பலி மறுவாழ்வு சிகிச்சைக்கு உடன்பட வேண்டும் என்பதே ஆகும்.

இந்த நிலையில் வினோத் காம்பிலியின் கடந்த கால சொத்துக்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் வினோத் காம்பிலுக்கு சொந்தமாக பல்வேறு இடங்களில் சொத்துக்கள் இருந்ததாகவும்; அவர் கோடீஸ்வரராக வாழ்ந்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது வினோத் காம்ப்ளிக்கு மாதம் ரூபாய். 30,000 பிசிசிஐயில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com