பி.சி.சி.ஐ இடைக்கால செயலாளராக தேவஜித் சைகியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பி.சி.சி.ஐ இடைக்கால செயலாளராக தேவஜித் சைகியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Published on: December 9, 2024 at 4:22 pm
Saikia appointed as BCCI interim secretary | இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ) இன் செயலாளராக இருந்தவர் ஜெய்ஷா. இவர் ஐ.சி.சி யின் புதிய தலைவராக கடந்த 1ஆம் தேதி பொறுப்பேற்றார்.
தற்போது பி.சி.சி.ஐ-ன் செயலாளர் பதவி நிரப்பப்பட வேண்டியுள்ளது. கிரிக்கெட் வாரிய விதிப்படி 45 நாட்களுக்குள் இந்த பதவியை நிரப்ப வேண்டும். அதன்படி, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால செயலாளராக தேவஜித் சைகியா நியமிக்கப்பட்டுள்ளது. இவரை கிரிக்கெட் வாரிய தலைவர் ரோஜர் பின்னி நியமித்துள்ளார்.
இதற்கு முன்னர் சைகியா இணை செயலாளராக இருந்தார். புதிய செயலாளரை தேர்ந்தெடுக்கும் வரையில் இவர் இந்த பதவியில் தொடர உள்ளார்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com