Sachin Tendulkar: மும்பை மாநகராட்சி தேர்தலில் சச்சின் தெண்டுல்கர் தனது வாக்கினை செலுத்தினார்.
Sachin Tendulkar: மும்பை மாநகராட்சி தேர்தலில் சச்சின் தெண்டுல்கர் தனது வாக்கினை செலுத்தினார்.

Published on: January 15, 2026 at 2:34 pm
மும்பை, ஜன.15, 2026: மகாராஷ்டிராவின் 29 மாநகராட்சிகளில் வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (ஜன.16, 2026) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மாநில தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, மொத்தம் 3.48 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்களாக உள்ளனர். இவர்கள், 15,908 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ளனர்.
இந்த நிலையில், வாக்குப்பதிவு இன்று காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் சச்சின் தெண்டுல்கர் வாக்களித்தார். அவர், தனது மனைவி அஞ்சலி டெண்டுல்கர் மற்றும் மகள் சாரா டெண்டுல்கருடன் வியாழக்கிழமை காலை பாண்ட்ரா மேற்கு பகுதியில் வாக்களித்தார்.
தொடர்ந்து, சச்சின் தெண்டுல்கர், “இது மிகவும் முக்கியமான தேர்தல். வாக்குகள் மூலம் நமது கருத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பை இது தருகிறது. அனைவரும் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: தவறான தொடர்பு, பணம் திருட்டு.. மேரி கோம்- ஓன்லர் விவாகரத்து ஏன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com