மெல்போர்ன், ஜனவரி 18, 2026;ஆஸ்திரேலிய ஓபன் 2026-இன் முதல் நாளே ரசிகர்களின் கோபமும் விமர்சனமும் சூழ்ந்ததாக அமைந்தது. ஜெர்மன் டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், முதல் சுற்றில் கேப்ரியல் டையல்லோவை வெற்றி கொண்டு முன்னேறினார். எனினும், இந்த போட்டி ரசிகர்களிடையே சர்ச்சையை கிளப்பியது. ஸ்வெரெவ் வெற்றி பெற்றாலும், பலர் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இந்த போட்டியில், ஜெர்மன் டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், ஆஸ்திரேலிய ஓபன் 2026 முதல் சுற்றில் சவாலான வெற்றியை பெற்றார். ரோட் லேவர் அரீனாவில் நடைபெற்ற போட்டியில், உலக தரவரிசையில் 41-வது இடத்தில் உள்ள கேப்ரியல் டையல்லோவிடம் முதல் செட்டை 6-7(1) என இழந்தார். ஆனால், பின்னர் அவர் வலுவாக மீண்டு, 6-1, 6-4, 6-2 என தொடர்ந்து மூன்று செட்களில் வெற்றி பெற்று, வெப்பமான பிற்பகலில் போட்டியை கைப்பற்றினார்.
இதையும் படிங்க; இந்திய பேட்மிண்டன்.. ஜப்பான் வீரரை வீழ்த்திய லக்ஷ்யா சென்.. காலிறுதிக்கு முன்னேற்றம்!
இந்த நிலையில், ஜெர்மன் டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், தனது முதல் சுற்றுப் போட்டி குறித்து கூறியதாவது: “உண்மையாகச் சொன்னால், டிரா பார்த்தபோது நான் மகிழ்ச்சியாக இல்லை. முன்னாள் அமெரிக்க கல்லூரி வீரர் டையல்லோ மிகவும் ஆபத்தான, சீட் செய்யப்படாத வீரர்களில் ஒருவராக இருக்கிறார்.
முதல் செட் முடிந்தபோது, ‘இதற்கு மேல் மோசமாக இருக்க முடியாது’ என்று நினைத்தேன். ஆனால்… அதன் பிறகு எனக்கு மிகவும் நல்லதாக மாறியது.” என்றார். இதற்கிடையில், இந்த போட்டி ரசிகர்களிடையே சர்ச்சையை கிளப்பியது. ஸ்வெரெவ் வெற்றி பெற்றாலும், பலர் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; அண்டர்-19 உலகக் கோப்பை.. அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்