Sri Lanka vs Australia 2nd Test: இலங்கையின் காலேயில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா இலங்கையை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.
Sri Lanka vs Australia 2nd Test: இலங்கையின் காலேயில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா இலங்கையை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.
Published on: February 9, 2025 at 1:25 pm
இலங்கை – ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் : ஆஸ்திரேலியா இலங்கையை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இரண்டாவது டெஸ்டில் வென்றது. ஆஸ்திரேலியா- இலங்கை அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி, காலேயில் நடந்தது.
இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்டில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 9, 2025) ஆஸ்திரேலியா 17.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் என்ற இலக்கை துரத்தி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
காலே சர்வதேச மைதானத்தில் நடந்த இரண்டாவது இன்னிங்ஸில் டிராவிஸ் ஹெட் 23 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில் உஸ்மான் கவாஜா 44 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முதல் இன்னிங்ஸ்
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை 97.4 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்திருந்தது.
மறுபுறம், ஆஸ்திரேலியா 106.4 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 414 ரன்கள் எடுத்திருந்தது.
இரண்டாவது இன்னிங்ஸ்
இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை 68.1 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலியா 17.4 ஓவரில் 75 ரன்கள் எடுத்து வெற்றியை ருசித்தது.
இலங்கை அணி வீரர்கள்
இலங்கை: பாத்தும் நிசாங்க, திமுத் கருணாரத்னே, தினேஷ் சண்டிமால், ஏஞ்சலோ மேத்யூஸ், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா (சி), குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா, நிஷான் பீரிஸ், லஹிரு குமார
ஆஸ்திரேலியா அணி வீரர்கள்
உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித் (சி), ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பியூ வெப்ஸ்டர், கூப்பர் கோனாலி, மிட்செல் ஸ்டார்க், மேத்யூ குஹ்னெமன், நாதன் லியான்
இதையும் படிங்க :
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com