Asian Boxing Championships : இந்திய குத்துச்சண்டை வீரர்கள் சச்சின் சிவாச் மற்றும் விசுவநாத் சுரேஷ் காலிறுதிக்கு முன்னேறினர்.
Asian Boxing Championships : இந்திய குத்துச்சண்டை வீரர்கள் சச்சின் சிவாச் மற்றும் விசுவநாத் சுரேஷ் காலிறுதிக்கு முன்னேறினர்.

Published on: April 2, 2026 at 10:14 am
புதுடெல்லி, ஏப்.2, 2026: ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் சச்சின் சிவாச் மற்றும் விசுவநாத் சுரேஷ் காலிறுதிக்கு முன்னேறினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணிக்கு முக்கிய வெற்றியை பெற்றுத் தந்துள்ளனர்.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று மங்கோலியாவின் உலான் பாதரில் இந்திய வீரர்கள் சச்சின் சிவாச் மற்றும் விசுவநாத் சுரேஷ் காலிறுதிக்கு முன்னேறினர்.
சச்சின் சிவாச், 60 கிலோ பிரிவில், புயந்தலை பயர்கூவை எதிர்த்து கடுமையான போட்டியில் 4-1 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் அவர் செங்-வேய் லீயை எதிர்கொள்கிறார்.
விசுவநாத் சுரேஷ்-ஐ பொறுத்தமட்டில், பெக்சாட் எர்கேஷோவை எதிர்த்து 5-0 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். அடுத்ததாக அவர் தற்போதைய உலக சாம்பியன் சன்சார் தஷ்கென்பாய்யை சந்திக்கிறார்.
இதையும் படிங்க: மும்பையில் ஐ.பி.எல் ஒளிபரப்பு என்ஜினீயர் மரணம்.. போலீஸ் விசாரணை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com