ஷதாப் குழந்தாய் மைதானத்தில் விளையாடி காட்டு.. அப்ரிடி அதிரடி!

Shahid Afridi: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், ஷாகித் அப்ரிடி ஷதாப் கானின் “இந்தியா உலகக் கோப்பை” கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். “பேட்டா (குழந்தை), மைதானத்தில் பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடி காட்டுங்கள்” என்று கூறினார்.

Published on: February 20, 2026 at 7:16 pm

இஸ்லாமாபாத், பிப்.20, 2026: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி, ஷதாப் கானை குறிவைத்து, அவர் மைதானத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “பேட்டா, மைதானத்தில் பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடி காட்டுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிடி, ஷதாப் கானின் கருத்துக்கு எதிராகக் கடுமையாகப் பதிலளித்தார். ஷதாப், முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவை உலகக் கோப்பைகளில் வெல்ல முடியவில்லை, ஆனால் தனது அணி 2021-இல் அதைச் செய்தது என்று கூறியிருந்தார்.

2026 டி-20 உலகக் கோப்பை, குழு ஏ போட்டியில் கொழும்பில் நமீபியாவை வென்ற பிறகு, 27 வயதான ஷதாபிடம், அப்ரிடி மற்றும் முகமது யூசுப் போன்ற முன்னாள் வீரர்களின் விமர்சனங்கள் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு ஷதாப் கான், “தாம் 2021-இல் துபாயில் இந்தியாவை தோற்கடித்த அணியின் ஒரு பகுதியாக இருந்ததை நினைவூட்டினார்.

இதற்குப் பதிலளித்த ஷாகித் அப்ரிடி, “அப்படியென்றால் ஷதாப் பேட்டா, நீங்களும் செயல்திறன் காட்டுங்கள். பேட்டா, செயல்திறன் காட்டுங்கள் (தயவு செய்து விளையாடுங்கள்). கடினமான காலங்களில் நாங்கள் உங்களுடன் இருந்தோம்; நீங்கள் உள்நாட்டு கிரிக்கெட் விளையாடவில்லை, இருந்தாலும் தேசிய அணியில் இடம் பெற்றீர்கள்.
எங்களுக்கு பதில் சொல்ல விரும்பினால், அதை மைதானத்தில் விளையாடி காட்டுங்கள். செயல்திறன் காட்டுங்கள், உலகக் கோப்பை முடிந்ததும் நாங்கள் அமைதியாக இருப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஏ.சி.சி மகளிர் ஆசிய கோப்பை.. நேபாளத்தை வீழ்த்திய இந்தியா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com