Bengaluru stampede: ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்டத்தில் நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், ஆர்.சி.பி அணி மீது புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Bengaluru stampede: ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்டத்தில் நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், ஆர்.சி.பி அணி மீது புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on: June 6, 2025 at 9:52 pm
Updated on: June 6, 2025 at 10:43 pm
பெங்களூரு, ஜூன் 6 2025: பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில், ஆர்.சி.பி ஐ.பி.எல் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாட்டை சேர்ந்த டெக்கி ஒருவர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி தப்பியதாக கூறப்படும் 25 வயது இளைஞர் ஒருவர் கப்பன் பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில் ஆர்.சி.பி அணி நிர்வாகம் மீது புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பி.டி.ஐ மற்றும் ஏ.என்.ஐ செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், “ஜூன் 4 அன்று எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA) மற்றும் டி.என்.ஏ (DNA) நிறுவனம் ஆகியவை பொறுப்பேற்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாரை 25 வயதான ரோலன் கோம்ஸ் என்பவர் கப்பன் பார்க் காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திறந்தவெளி பேருந்தில் வெற்றி அணிவகுப்பு நடத்துவது குறித்து ஆர்சிபி விளம்பரப்படுத்தியதாகவும் புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக எஃப்.ஐ.ஆர்..
முன்னதாக வியாழக்கிழமையும் ஆர்சிபி, நிகழ்வு மேலாண்மை நிறுவனமான டிஎன்ஏ மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கேஎஸ்சிஏ) மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வெற்றி ஊர்வலங்கள் தேவை இல்லை; கௌதம் கம்பீர்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com