ரமலான் 2026: பிப்ரவரி 19 முதல் நோன்பு தொடக்கம்.. சவுதியில் பிறை எப்போது?

Ramadan 2026: புனித ரமலான், பிப்ரவரி 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

Published on: February 17, 2026 at 6:02 pm

சென்னை, பிப்.17, 2026: இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான், பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

புனித ரமலான்

ரமலான் இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் (ஹிஜ்ரி) ஒன்பதாவது மாதமாகும். இந்த புனித மாதம் புதிய நிலவுக்குப் பிறகு பிறை நிலா தோன்றுவதால் தொடங்குகிறது. உலகம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு, தொழுகை, தியானம் ஆகியவற்றுடன் இந்த மாதத்தை கடைப்பிடிக்கின்றனர். இந்த மாதம் முழுவதும், பகலொளி உதயத்திலிருந்து பிறை நிலா தோன்றும் நேரம் (இஃப்தார்) வரை உணவும், பானமும் தவிர்க்கப்படுகிறது. ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமை “அல்விதா ஜும்மா”க்கு பிறகு, மாதம் முடிவடைகிறது; அதன் பின் இஸ்லாமின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றான ஈத் அல்-பித்ர் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு, ரமலான் பிப்ரவரி 18, புதன்கிழமை மாலை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக இஸ்லாமிய அதிகாரப்பூர்வ நாளேட்டில், சவுதி அரேபியாவின் ரியாதில் நிலா காலை 3 மணிக்கு, ஜெட்டாவில் 2 மணிக்கு, கிழக்கு மாகாணத்தில் சுமார் 3 மணிக்கு உதயமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிப்ரவரி 18 அன்று பிறை நிலா காணப்பட்டால், நோன்பு பிப்ரவரி 19 முதல் தொடங்கும். ரமலான் மார்ச் 18 அன்று முடிவடைந்து, ஈத் அல்-பித்ர் மார்ச் 19 அன்று கொண்டாடப்படும். பொதுவாக, இந்தியாவை பொருத்தமட்டில் முஸ்லிம்கள் சவுதி அரேபியாவை விட ஒரு நாள் பின்னர் நோன்பைத் தொடங்குவார்கள். ஏனெனில் பிறை நிலா முதலில் மக்காவில் காணப்படுகிறது. ரம்ஜான், தூய்மை மற்றும் சுய கட்டுப்பாட்டின் காலமாகக் கருதப்படுகிறது. இது ஆன்மீக வளர்ச்சிக்கான நேரமாகும்.

இதையும் படிங்க: ஓய்வூதிய திருத்தம்.. 47 ஆயிரம் ஊழியர்கள் பயன்.. 30% உயர்வு.. சூப்பர் அறிவிப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com