Kulasekharapatnam Dussehra festival | குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலின் தசரா பெருந்திருவிழா கொடியேற்றம் அக்.3ஆம் தேதி நடைபெறுகிறது.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Kulasekharapatnam Dussehra festival | குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலின் தசரா பெருந்திருவிழா கொடியேற்றம் அக்.3ஆம் தேதி நடைபெறுகிறது.
Published on: September 12, 2024 at 11:48 am
Updated on: September 12, 2024 at 11:55 am
Kulasekharapatnam Dussehra festival | குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலின் அறங்காவலர் குழு தலைவர் வே.கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலின் தசரா பெருந்திருவிழா கொடியேற்றம் அக்.3, 2024 அன்று நடைபெறுகிறது.
திருவிழா 13.10.2024 செவ்வாய் கிழமை வரை வெகுசிறப்பாக நடைபெற உள்ளது. மேற்படி திருவிழா நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் தசரா குழுக்கள் செல்லும் வழி மற்றும் இதர செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் 13.09.2024 (வெள்ளிக்கிழமை) அன்று திருச்செந்தூர் வருவாய் கோட்டாச்சியர் மற்றம் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறும்.
இந்தக் கூட்டம், இத்திருக்கோயில் முன்மண்டபம் அருகில் உள்ள சிவனணைந்த பெருமாள் திருமண மண்டபத்தில் வைத்து காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
எனவே தசரா குழு நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் 13.09.2024 (வெள்ளிக்கிழமை) அன்று எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் திருவிழா நாட்களில் திருக்கோயிலுக்கு வரும் தசராக் குழுக்களையும் கட்டுப்படுத்தும் என்பது தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க மயானத்தில் கடும் தவம்; சுழட்டி அடித்த பேய்கள்: நேரில் காட்சிக் கொடுத்த முருகன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com