மயானத்தில் கடும் தவம்; சுழட்டி அடித்த பேய்கள்: நேரில் காட்சிக் கொடுத்த முருகன்!

தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் என்ற ஊரில் பிறந்து தமிழ் மற்றும் வடமொழியில் புலமை பெற்று விளங்கியவர் பாம்பன் சுவாமிகள். இவர் முருகனை வழிபட்டு வந்த ஒரு தமிழ் துறவி ஆவார். இவர் முருகனை நினைத்து 6666 பாடல்கள் இயற்றியுள்ளார். இவர் இயற்றிய சண்முக கவசம் மிகவும் புகழ்பெற்றது.

Published on: August 21, 2024 at 7:03 am

Updated on: August 28, 2024 at 12:52 am

முருகனை நேரில் தரிசித்த பாம்பன் சுவாமிகளின் கடும் தவம் குறித்து பார்க்கலாம். முருகப் பக்தர்கள் மத்தியில் பாம்பன் சுவாமிகளுக்கு முக்கிய இடமுண்டு.

தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் என்ற ஊரில் பிறந்து தமிழ் மற்றும் வடமொழியில் புலமை பெற்று விளங்கியவர் பாம்பன் சுவாமிகள். இவர் முருகனை வழிபட்டு வந்த ஒரு தமிழ் துறவி ஆவார். இவர் முருகனை நினைத்து 6666 பாடல்கள் இயற்றியுள்ளார். இவர் இயற்றிய சண்முக கவசம் மிகவும் புகழ்பெற்றது.

முருகனை நேரில் பார்க்க வேண்டும் என்பதே பாம்பன் சுவாமியின் வாழ்நாள் குறிக்கோளாக இருந்தது. இவர் தன் இரண்டு சீடர்களிடம் ஒரு மயானத்தில் சதுர குழி ஒன்றை வெட்ட சொல்லி தன்னுடைய நோக்கம் நிறைவேறும் வரை அதாவது முருகனை பார்க்கும் வரை சமாதி நிலை தியானத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.

அவர் தியான நிலையில் இருக்கும் பொழுது இரவு நேரங்களில் ஆவிகளும் பேய்களும் அவரின் தியானத்தை கலைக்க முயற்சி செய்தது. இதை அறிந்த பாம்பன் சுவாமிகள் யோக தண்டத்தை தூக்கி வீசியதும் பேய்கள் ஓடி மறைந்தன. பின்னர் தொடர்ந்து தியானத்தில் ஈடுபட நீண்ட பாம்பு ஒன்று அவரது காலினை உரசி சென்றது.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் மிக வேதனையோடு கடந்த நிலையில் பாம்பன் சுவாமிகள் முருகனிடம் முருகா எனக்கு ஏன் இப்படி ஒரு சோதனை? உன்னை காண வேண்டும் என்று தானே விரும்பினேன். வேறு எந்த தவறையும் நான் இளைக்கவில்லையே என்று கதறி அழுதார்.

தொடர்ந்து தியானத்தில் இருக்க ஏழாவது நாள் முருகனே பழனி தண்டாயுதபாணியாக காட்சி தந்து பாம்பன் சுவாமிகளுக்கு குரு உபதேசம் செய்து வைத்தார். தியானத்திலே அந்த மந்திரத்தை சுவாமிகள் தொடர்ந்து ஜெபித்தார். நாட்கள் ஓட ஓட பாம்பன் சுவாமியின் உடம்பு கட்டை போல் ஆகினர்.

ஒரு நாள் காலை சுவாமிகளுக்கு ஒரு அசரீரி கேட்க சுவாமிகள் யார் என்றார்? ஏகாதச உருவினிலே ஒருவர் வருகிறார் நீ எழுந்திரு என்று அந்த அசரீரி சொல்ல அதற்கு பாம்பன் சுவாமிகள் என்னை இடையூறு செய்யாதே என்றார்.

அசரீரி மீண்டும் எழுந்திரு எனச் சொல்ல என் அப்பன் முருகன் வந்தாலே ஒழிய வேறு யார் சொன்னாலும் கேளேன் என்று உரக்க கூறினார். உன் அப்பனே தான் எழுந்திரு என்றதும் விழித்து குருவின் காலடியில் சரணாகதி அடைந்தார்.

இவ்வாறு பல தடைகளை தாண்டி ஆறுமுகனை சந்தித்த பாம்பன் சுவாமிகள் மே 30, 1929 அன்று ஜீவசமாதி அடைந்தார். அவரது சமாதி கோவில் சென்னை, திருவான்மியூரில் உள்ளது.

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com