Kamal Singh Jamwal: “20 ஆண்டுகளாக பாரூக் அப்துல்லாவை கொல்ல விரும்பினேன்” என துப்பாக்கி ஆயுததாரி கமல் சிங் ஜாம்வால் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Kamal Singh Jamwal: “20 ஆண்டுகளாக பாரூக் அப்துல்லாவை கொல்ல விரும்பினேன்” என துப்பாக்கி ஆயுததாரி கமல் சிங் ஜாம்வால் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published on: March 13, 2026 at 7:02 pm
Updated on: March 13, 2026 at 7:03 pm
ஜம்மு காஷ்மீர், மார்ச் 13, 2026: ஜம்முவில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டு வெளியேறியபோது (மார்ச் 11, 2026) தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பாரூக் அப்துல்லா, படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார். சிசிடிவி காட்சிகளில், 63 வயதான கமல் சிங் ஜாம்வால், அப்துல்லாவை பின்புறம் இருந்து அணுகி, மிக அருகில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தியது பதிவாகியுள்ளது.
இந்நிலையில், போலீசார் விரைவாக நடவடிக்கை எடுத்து, ஜாம்வாலை கைது செய்தனர். இந்த நிலையில் நடைபெற்ற போலீஸ் விசாரணையில், இவர் கடந்த 20 ஆண்டுகளாக அப்துல்லாவை குறிவைத்து தாக்குவதற்கான வாய்ப்புக்காக காத்திருந்ததாக போலீசிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், இது தொடர்பாக தற்போது விவரங்கள் தெளிவாக இல்லை. துப்பாக்கியுடன் ஒருவர், பரூக் அப்துல்லா மிக அருகில் சென்று சுட்டார். பாதுகாப்பு குழுவின் தலையீட்டால் மட்டுமே அந்த படுகொலை முயற்சி தோல்வியடைந்தது” என்று மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தலைமை தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும்.. எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com