VK Pandian wife: சுஜாதா கார்த்திகேயன், நவீன் பட்நாயக்கின் முன்னாள் நெருங்கிய உதவியாளர் வி.கே. பாண்டியனின் மனைவி ஆவார். இவர், ஒடிசா நிதித்துறையில் சிறப்புச் செயலாளராகப் பணியாற்றினார்.
VK Pandian wife: சுஜாதா கார்த்திகேயன், நவீன் பட்நாயக்கின் முன்னாள் நெருங்கிய உதவியாளர் வி.கே. பாண்டியனின் மனைவி ஆவார். இவர், ஒடிசா நிதித்துறையில் சிறப்புச் செயலாளராகப் பணியாற்றினார்.
Published on: March 30, 2025 at 10:32 am
Updated on: March 30, 2025 at 8:26 pm
புதுடெல்லி, மார்ச் 30 2025: பிஜு ஜனதா தளத் தலைவர் நவீன் பட்நாயக்கின் முன்னாள் நெருங்கிய உதவியாளர் வி.கே. பாண்டியனின் மனைவியும், ஒடிசா கேடர் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சுஜாதா ஆர். கார்த்திகேயன், அரசுப் பணியில் இருந்து தாமாக (voluntary retirement) முன்வந்து ஓய்வு பெற்றார்.
இதனை சுஜாதா கார்த்திகேயன், ஓய்வூதிய அமைச்சகத்தின் துணைச் செயலாளர் பூபிந்தர் பால் சிங், ஒடிசா தலைமைச் செயலாளர் மனோஜ் அஹுஜாவுக்கு ஒரு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். 2000வது, ஒடிசா கேடர் அதிகாரியான சுஜாதா கார்த்திகேயன், நிதித்துறையில் சிறப்புச் செயலாளராக இருந்தார். இந்த நிலையில், இவர் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தன்னார்வ ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்தார் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய அவரது கணவர் வி.கே. பாண்டியனும் அக்டோபர் 2023 இல் தன்னார்வ ஓய்வு பெற்று பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியில் சேர்ந்தார். இருப்பினும், கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பிஜூ ஜனதா தளம் தோல்வியடைந்ததது. இதனால், கட்சியின் 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது. பாண்டியன் தீவிர அரசியலை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நாக்பூர் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி: பயணத் திட்டம் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com