Thol Thirumavalavan met Nirmala Sitharaman: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேசினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான தொல் திருமாவளவன்.
Thol Thirumavalavan met Nirmala Sitharaman: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேசினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான தொல் திருமாவளவன்.
Published on: March 11, 2025 at 1:35 pm
Updated on: March 11, 2025 at 5:06 pm
புதுடெல்லி மார்ச் 11 2025: நாடாளுமன்றத்தில் மும்மொழி கொள்கை தொடர்பான விவாதம் மிகப்பெரிய பரபரப்பு எட்டி உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக தொல் திருமாவளவன் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் (மார்ச் 10, 2025), ” பட்டியல் மற்றும் பழங்குடி சமூக கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வருமான வரம்பை ரூபாய் 2.50 லட்சம் என்பதை உயர்த்த வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தொல் திருமாவளவன், ” மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மாநிலங்களுக்கான வரி நிதி பகிர்வை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.
மேலும், மேல்நிலை மற்றும் உயர் கல்வி மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் 2026 இல் முடிவடைய உள்ளது; இதனை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்தேன்.
தொடர்ந்து பட்டியல் மற்றும் பழங்குடியின கல்வி உதவித் தொகையை பெறுவதற்கான வருமான வரம்பை ரூபாய் இரண்டு புள்ளி 50 லட்சம் என்பதை ரூபாய் 8 லட்சமாக உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தேன்.
அதேபோல் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான வருமான வரம்பையும் ரூபாய் 8 லட்சமாக உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தேன்” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இந்த சந்திப்பு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது எனவும் தொல் திருமாவளவன் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் தொல் திருமாவளவன் சந்தித்தபோது அவருடன் ரவிக்குமாரும் உடன் இருந்தார்.
இதையும் படிங்க: கர்நாடக பட்ஜெட் 2025: மேகதாது அணை விவகாரம்.. சித்தராமையா பேச்சுக்கு துரைமுருகன் பதிலடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com