Vande Bharat Sleeper train: முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் கொல்கத்தா- கவுஹாத்தி இடையே இயக்கப்பட உள்ளது.
Vande Bharat Sleeper train: முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் கொல்கத்தா- கவுஹாத்தி இடையே இயக்கப்பட உள்ளது.

Published on: January 1, 2026 at 5:03 pm
புதுடெல்லி, ஜன.1, 2026: இந்திய ரயில்வே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் சோதனை, பரிசோதனை மற்றும் பாதுகாப்பு சான்றிதழ் பணிகளை முடித்துள்ளது. இந்த ரயிலில் முதல் சேவை கவுஹாத்தி- கொல்கத்தா இடையே இயக்கப்பட உள்ளது. இதன் தொடக்க விழா அடுத்த 15–20 நாள்களில் நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.
லந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்
VIDEO | India’s first Vande Bharat Sleeper Class train will run on the Kolkata–Guwahati route.
— Press Trust of India (@PTI_News) January 1, 2026
Railway Minister Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) says, “The services will become operational in the next 15–20 days, possibly around January 18–19. We have requested the Prime… pic.twitter.com/A0x5m27TKo
வந்தே பாரத் ரயிலின் அடுத்த கட்ட முன்னேற்றமாக ஸ்லீப்பர் ரயில் அறிமுகமாகிறது. இது, 1,000 கி.மீ.க்கும் அதிகமான நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் இரவு பயணத்திற்கு வசதியான படுக்கை வசதி உள்ளது. மேலும், பயணத்தின் போது அதிர்வுகளை குறைத்து மென்மையான அனுபவம். வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய ஸ்லீப்பர் ரயில், வடகிழக்கு இந்தியாவையும் கிழக்கு இந்தியாவையும் இணைக்கும் முக்கியமான போக்குவரத்து முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 2026 புத்தாண்டு செழிப்பு, வளர்ச்சி, வெற்றியை கொடுக்கட்டும்.. பிரதமர் நரேந்திர மோடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com