(1026-2026) மீண்டும் நிர்மாணிக்கப்பட்ட சோம்நாத் ஆலயம்.. தயங்கிய நேரு.. சாதித்து காட்டிய பட்டேல், ராஜேந்திர பிரசாத்!

Somnath temple: சோம்நாத் ஆலயம் நீண்ட கலாச்சார தொடர்பு கொண்டது; இந்த ஆலயம் மீண்டும் கட்டி எழுப்பப்பட்ட போது நேரு தயக்கம் காட்டினார்.

Published on: January 5, 2026 at 1:38 pm

Updated on: January 5, 2026 at 8:03 pm

புதுடெல்லி, ஜனவரி 5, 2026; இந்திய வரலாற்றில் மிக நீண்ட கலாச்சார பண்பாடு தொடர்பை கொண்டது சோம்நாத் ஆலயம். இந்த ஆலயம் சரியாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு (1026) ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முகமது கஜினி என்பவரால் சேதமாக்கப்பட்டது.

இந்த ஆலயத்தில் மிகப்பெரிய அளவில் தங்கம் உள்ளிட்ட செல்வங்கள் இருந்ததாக கூறப்படுகிறது; இந்த நிலையில் அந்நிய படையெடுப்பாளர்கள் இந்த ஆலயத்தை தொடர்ந்து சேதப்படுத்தி கொண்டே இருந்தனர். இதனால் இந்த ஆலயம் மிகப்பெரிய அளவில் சிதைந்து காணப்பட்டது.

இந்த நிலையில் சோமநாதர் ஆலயத்திற்கு 1947 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சுவாமி தரிசனம் செய்ய சென்றார்; அப்போது இந்த ஆலயத்தின் நிலை கண்டு மிகவும் வருந்திய சர்தார் வல்லபாய் பட்டேல், ஆலயத்தை மீண்டும் நிர்மாணிக்க முடிவு செய்தார்.

அதை செய்தும் காட்டினார்; அக்காலக் கட்டத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு ராஜேந்திர பிரசாத் மிகவும் உறுதுணையாக இருந்தார். இந்த நிலையில் ஆலயம் மீண்டும் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் அதை, மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கும் விழாவில் கலந்து கொள்ள அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தயக்கம் காட்டினார்.

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சோமநாதர் திருக்கோவில், நமது நாட்டின் வளமான கலாச்சாரம் மட்டும் பண்பாட்டை இன்றளவும் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது. தொடர்ச்சியான அந்நிய படையெடுப்புகளால் சிதைக்கப்பட்ட போதிலும், இந்த ஆலயம் இன்றளவும் உயிர்ப்புடன் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; சீனாவை முந்திய இந்தியா.. அரிசி உற்பத்தியில் புதிய சாதனை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com