Hajj 2025 | ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
February 6, 2025
Hajj 2025 | ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Published on: September 24, 2024 at 12:41 pm
Hajj 2025 | ஹஜ்-2025க்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை 2024 செப்டம்பர் 30 வரை நீட்டிப்பதாக இந்திய ஹஜ் கமிட்டி (HCoI) அறிவித்துள்ளது. இந்திய சர்வதேச பாஸ்போர்ட்களை வைத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் ஹஜ் – 2025 க்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
இது குறித்து வெளியான அறிக்கையில், “மக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் ஆணையம், ஹஜ் விண்ணப்பப் படிவங்களை (HAF) சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியை 30.09.24 11:59 மணி வரை நீட்டிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், இதேபோன்ற சுற்றறிக்கை HCoI ஆல் வெளியிடப்பட்டது. அப்போது, தேதி 23 செப்டம்பர் 2024 வரை நீட்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில், ஜம்மு காஷ்மீரில் இருந்து மொத்தம் 7008 யாத்ரீகர்கள் புனித யாத்திரையை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : திருப்பதி லட்டின் தரம் குறைவு; பண்டைய காலத்தில் என்ன தண்டனை? கல்வெட்டு தகவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com