Terrorist Killed in Encounter: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். எனினும், பாதுகாப்பு படையினர் ஆபரேஷனை தொடர்ந்துவருகின்றனர். அப்பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Terrorist Killed in Encounter: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். எனினும், பாதுகாப்பு படையினர் ஆபரேஷனை தொடர்ந்துவருகின்றனர். அப்பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Published on: February 5, 2026 at 2:05 pm
ஜம்மு, பிப்.5, 2026: ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மோதலில், கூட்டு பாதுகாப்பு படைகள் ஒரு பயங்கரவாதியை சுட்டுக் கொன்றன. இது தொடர்பாக வைட் நைட் கார்ப்ஸ் தனது ட்விட்டர் எக்ஸ் தளப் பதிவில், ஆபரேஷன் த்ராஷி-I பயங்கரவாதிகளை ஒழிக்க நடைபெற்று வருவதாகவும், அதில் ஒருவரை சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளது.
அதாவது, கிஷ்ட்வார் மாவட்டத்தின் சத்ரூவின் டிச்சாட் பகுதியில் கூட்டு பாதுகாப்பு படைகள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதில் இரண்டு பாரா ஸ்பெஷல் படைகள் உட்பட பல்வேறு பாதுகாப்பு அணிகள் இணைந்து செயல்படுகின்றன.
முன்னதாக, அந்த பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக அறிந்த பாதுகாப்பு படைகள் முற்றுகை மற்றும் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டபோது துப்பாக்கிச் சண்டை வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கமல்ஹாசன் முதல் உரை.. வெடித்தது சர்ச்சை.. என்ன பேசினார் கமல்- நிர்மலா சீதாராமன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com