Special train: இந்திய ரயில்வே ஹோலி பண்டிகை காலத்தில் பயணிகள் அதிகமாக பயணிப்பதை கருத்தில் கொண்டு 1,244 சிறப்பு ரயில் சேவைகள் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
Special train: இந்திய ரயில்வே ஹோலி பண்டிகை காலத்தில் பயணிகள் அதிகமாக பயணிப்பதை கருத்தில் கொண்டு 1,244 சிறப்பு ரயில் சேவைகள் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

Published on: February 26, 2026 at 2:23 pm
புதுடெல்லி, பிப்.26, 2026: இந்திய ரயில்வே ஹோலி பண்டிகை காலத்தில் பயணிகள் அதிகமாக பயணிப்பதை இருப்பதை கருத்தில் கொண்டு 1,244 சிறப்பு ரயில் சேவைகள் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் பல்வேறு மாநிலங்களுக்கு இயக்கப்படும். பயணிகள் கூட்டத்தை குறைத்து, அனைவருக்கும் வசதியான பயணம் ஏற்படுத்துவதே நோக்கம்.
ஹோலி பண்டிகை நாட்களில் வட இந்தியா, கிழக்கு இந்தியா போன்ற பகுதிகளில் அதிக சேவைகள் இயக்கப்படும். முன்பதிவு வசதி ஆன்லைனிலும், ரயில் நிலையங்களிலும் கிடைக்கும். இது பயணிகளுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும், ஏனெனில் ஹோலி காலத்தில் பொதுவாக ரயில்களில் மிகுந்த நெரிசல் இருக்கும். அந்த வகையில் இந்த சேவைகள் பிப்.25, 2026இல் தொடங்கி மார்ச் மாதம் 18ஆம் தேதி வரை தொடரும். இதற்கிடையில், தேவைக்கு ஏற்ப ரயில்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: முன்னாள் முதலமைச்சரின் 19 வயது பேரன் மர்ம மரணம்.. மணாலியில் உச்சக்கட்ட பரபரப்பு!
முக்கிய நகரங்கள், மாநில தலைநகரங்கள் மற்றும் பிராந்திய மையங்களை இணைக்கும் வகையில் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி கிழக்கு மத்திய ரயில்வே 50 சிறப்பு ரயில்களும், வடரயில்வே 48 சிறப்பு ரயில்களும், மத்திய ரயில்வே 20 சிறப்பு ரயில்களும், மேற்கு ரயில்வே 32 சிறப்பு ரயில்களும், தென்கிழக்கு ரயில்வே 28 சிறப்பு ரயில்களும் இயக்குகிறது.
இந்த பெரிய அளவிலான ஏற்பாடுகள், பயணிகள் பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் பயணம் செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை திட்டமிடலின் ஒரு பகுதியாகும். மேலும், ஹோலி பண்டிகை காலத்தில் லட்சக்கணக்கான பயணிகள் சிரமமின்றி பயணம் செய்யும் வகையில், வழக்கமான பயணிகளுக்கும் இடையூறு குறைவாக இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: இளைஞர் காங்கிரஸ் பிரமுகருக்கு 4 நாள் போலீஸ் காவல்.. என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்கு?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com