சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி.. என்ன பிரச்சனை? மருத்துவர் பதில்

Sonia Gandhi Health condition: சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை புதுடெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published on: March 25, 2026 at 10:14 am

புதுடெல்லி மார்ச் 25 2026;முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உடல்நலக்குறைவால், டெல்லி நகரில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், “பெரிய பிரச்சினை எதுவும் இல்லை” என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியிலும், அவர் டெல்லி நகரில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அப்போது, அவருக்கு சுவாசக் குறைபாடு ஏற்பட்டது. இது குறித்து, மருத்துவமனை தலைவர் அஜய் ஸ்வரூப் கூறுகையில், விரிவான மருத்துவ பரிசோதனையில், சோனியா காந்தியின் ப்ராங்கியல் ஆஸ்துமா சிறிதளவு மோசமடைந்தது கண்டறியப்பட்டது” என்றார்.

இதற்கு காரணம், குளிரான வானிலை மற்றும் டெல்லியின் மாசு நிலை இணைந்து தாக்கம் செலுத்தியது எனக் கூறப்படுகிறது. டெல்லியில் வழக்கத்துக்கு மாறாக கடந்த ஒரு வார காலம் மழை மற்றும் குளிர் அதிகரித்து காணப்படுகிறது; காலை மற்றும் இரவு நேரங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில், தற்போது, சோனியா காந்தி மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார், மேலும் நிலைமை பெரிய பிரச்சினை அல்ல என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க; மதம் மாறினால் பட்டியல் இன அந்தஸ்து இழப்பு.. உச்ச நீதிமன்றம்!

நிலுவை வழக்குகளை குறைக்க நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அவசியம்.. உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா! Justice Nagarathna

நிலுவை வழக்குகளை குறைக்க நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அவசியம்.. உச்ச நீதிமன்ற நீதிபதி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com