Sonam Wangchuk in jail: தனது கணவர் சோனம் வாங்சுக், 114 நாட்கள் கடந்தும் சிறையில் இருப்பதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
Sonam Wangchuk in jail: தனது கணவர் சோனம் வாங்சுக், 114 நாட்கள் கடந்தும் சிறையில் இருப்பதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

Published on: January 19, 2026 at 10:49 am
Updated on: January 19, 2026 at 12:09 pm
புதுடெல்லி ஜனவரி 19, 2026; சோனம் வாங்சுக் 114 நாட்கள் கடந்தும் இன்னமும் சிறையில் இருப்பதாக அவரது குடும்பம் குற்றம் சாட்டுகிறது. இது தொடர்பாக பேசிய அவரது குடும்பத்தினர், “இந்த வழக்கில் நடவடிக்கை தவறுகள் மற்றும் பழைய ஆதாரங்கள் (Stale Evidence) மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன” என குற்றம் சாட்டினார்கள்.
மேலும், வாங்சுக் மீது விதிக்கப்பட்ட கைது உத்தரவில் குறிப்பிடப்பட்ட காரணங்கள், ஒரு வருடத்திற்கு மேற்பட்ட பழைய வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டவை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, விவாதத்திற்கு உள்ளான 5 முதல் தகவல் அறிக்கைகளில் (FIRs) 3-இல் வாங்சுக் பெயரே இல்லை எனவும் மீதமுள்ள 2-இல் ஒன்றானது ஆகஸ்ட் 2025-இல் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அதற்குப் பிறகு எந்த அறிவிப்போ அல்லது விசாரணையோ மேற்கொள்ளப்படவில்லை” எனவும் அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
இதையும் படிங்க; ‘காங்கிரஸிடம் வளர்ச்சித் திட்டங்கள் இல்லை.. மக்கள் நம்பிக்கை இழப்பு’.. பிரதமர் நரேந்திர மோடி!
சோனம் வாங்சுக் – தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது
சோனம் வாங்சுக், 2025 செப்டம்பர் 26 அன்று கடுமையான தேசிய பாதுகாப்பு சட்டம் (NSA)-இன் கீழ் கைது செய்யப்பட்டார். அவரது தொடர் சிறைவாசம், தற்போது இந்திய உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் சட்ட மற்றும் அரசியல் விவாதத்தின் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.
மேலும், இந்த வழக்கு, சட்ட நடைமுறைகள், மனித உரிமைகள் மற்றும் அரசியல் விளைவுகள் குறித்து நாட்டில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
சோனம் மனைவி பேட்டி
இந்த நிலையில், பி.டி.ஐ (PTI)-க்கு அளித்த பேட்டியில், சோனம் வாங்சுக் அவர்களின் மனைவி கீதாஞ்சலி அங்க்மோ கூறியதாவது, அவரது மீது விதிக்கப்பட்ட கைது உத்தரவு அடிப்படை ஆதாரம் இல்லாதது எனவும், மத்திய அரசு இதை தாமதித்து நீட்டித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், நீண்டகால சிறைவாசம், வாங்சுக் அவர்களை தனிப்பட்ட முறையில் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அவர் பல ஆண்டுகளாக மேற்கொண்ட பள்ளிகள், கல்வி முயற்சிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தையும் சீர்குலைக்கிறது எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க; ‘காங்கிரஸிடம் வளர்ச்சித் திட்டங்கள் இல்லை.. மக்கள் நம்பிக்கை இழப்பு’.. பிரதமர் நரேந்திர மோடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com