கேரளத்தில் காங்கிரஸில் 9 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு.. மகளிர் நிர்வாகி ஷாமா வருத்தம்!

Kerala election 2026: “கேரளத்தில் பெண்களுக்கு 92 இடங்களில் வெறும் 9 இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன” என காங்கிரஸ் தலைவர் ஷாமா முகமது குற்றஞ்சாட்டினார்.

Published on: March 20, 2026 at 4:57 pm

திருவனந்தபுரம், மார்ச் 20, 2026: கேரள மாநிலத்தின் காங்கிரஸ் மகளிர் பிரிவு மூத்தத் தலைவர் ஷாமா முகமது, வரவிருக்கும் கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு குறைந்த அளவு இடம் வழங்கப்பட்டிருப்பதை குறித்து கவலை வெளியிட்டுள்ளார். இதற்காக ராகுல் காந்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “கேரள சட்டமன்ற தேர்தலில் உரிய தொகுதிகள் மறுக்கப்பட்டாலும் நாங்கள் தோற்கவில்லை. நான் மதிக்கும், நேசிக்கும், என் கண்ணியமிகு தலைவர் ராகுல் காந்தியை கேரள காங்கிரஸ் பெண்களுக்கு ஆதரவு அளிக்குமாறு மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன். 92 சட்டமன்ற இடங்களில் பெண்களுக்கு வெறும் 9 இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதுவரை அறிவிக்கப்பட்ட 16 லோக்சபா இடங்களில், ஒரே ஒரு இடம் மட்டுமே பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வருத்தமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, கேரள மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் கூறுகையில், “காங்கிரஸ் போட்டியிடும் 95 இடங்களுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 52 இடங்களை முன்பே அறிவித்தோம், மீதமுள்ள 40 இடங்கள் இப்போது இறுதி செய்யப்பட்டுள்ளன. தேர்வு செயல்முறை முடிந்துவிட்டது, இனி பிரசாரத்தில் கவனம் செலுத்துவோம்” என்றார்.

இதையும் படிங்க: மம்தா பானர்ஜியை 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன்.. பா.ஜ.க சுவேந்து அதிகாரி!

ஹார்முஸ் ஜலசந்தி: இந்தியக் கப்பல்களுக்கு பாதுகாப்பு.. கூடுதல் போர்க்கப்பல்கள் அனுப்பிய மத்திய அரசு Iran Israel War

ஹார்முஸ் ஜலசந்தி: இந்தியக் கப்பல்களுக்கு பாதுகாப்பு.. கூடுதல் போர்க்கப்பல்கள் அனுப்பிய மத்திய அரசு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com