Narendra Modi: இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல், ஜம்மு காஷ்மீர் முழுவதையும் இந்தியாவுடன் இணைக்க விரும்பினார். ஆனால் நேரு தடுத்தார் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
Narendra Modi: இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல், ஜம்மு காஷ்மீர் முழுவதையும் இந்தியாவுடன் இணைக்க விரும்பினார். ஆனால் நேரு தடுத்தார் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Published on: October 31, 2025 at 3:20 pm
அகமதாபாத், அக்.31, 2025: “சர்தார் வல்லபாய் படேல் மற்ற சமஸ்தானங்களை வெற்றிகரமாக ஒன்றிணைத்தது போலவே காஷ்மீர் முழுவதையும் இந்தியாவுடன் இணைக்க விரும்பினார், ஆனால் ஜவஹர்லால் நேரு அதை நிறைவேற்றுவதைத் தடுத்தார் என்று பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (அக்.31, 2025) தெரிவித்தார்.
தொடர்ந்து, “வரலாற்றை எழுதும் நேரத்தை மக்கள் வீணாக்கக்கூடாது, மாறாக அதை உருவாக்க கடுமையாக உழைக்க வேண்டும்” என்று சர்தார் படேல் நம்பினார் என்றார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் ஏக்தா நகரில் கூறுகையில், “காங்கிரசின் தவறு காரணமாக நாடு பல தசாப்தங்களாக துன்பப்பட்டது” என்றார். முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முதல் துணைப் பிரதமரான படேலின் 150ஆவது பிறந்தநாளைக் குறிக்கும் அணிவகுப்பில் கலந்துகொண்டார்.
அதன்பின்னர், பிரதமர் நரேந்திர மோடி ஒரு கூட்டத்தில், “காஷ்மீர் பிரிக்கப்பட்டு தனி அரசியலமைப்பு மற்றும் கொடி வழங்கப்பட்டது. காங்கிரசின் தவறு காரணமாக நாடு பல தசாப்தங்களாக துன்பப்பட்டது” என்றார். மேலும், நாட்டின் முதல் உள்துறை அமைச்சரும் சுதந்திர இயக்கத் தலைவருமான பட்டேல், “காஷ்மீர் முழுவதையும் இந்தியாவுடன் இணைக்க விரும்பினார். ஆனால் நேரு தடுத்தார்” என்றார். முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, ஒற்றுமை சிலை நினைவு சின்னத்தில் படேலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படிங்க: பீகாரில் 1 கோடி வேலை வாய்ப்பு.. பட்டியல் மாணவர்களுக்கு ரூ.2,000 உதவித் தொகை.. தே.ஜ.க தேர்தல் அறிக்கை வெளியீடு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com