National Herald case: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
National Herald case: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Published on: May 2, 2025 at 8:32 pm
புதுடெல்லி, மே 2 2025: நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு டெல்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மே 2 2025) நோட்டீஸ் அனுப்பியது.
ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே இந்த நோட்டீஸை அனுப்பினார். அதன்படி, காங்கிரஸ் மூத்தத் தலைவர் சாம் பிட்ரோடா, சுமன் துபே, சுனில் பண்டாரி உள்ளிட்டோரும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது, அமலாக்கத் துறைக்காக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் SV ராஜு ஆஜரானார். அவர், சம்மனுக்கு முன் எந்த நோட்டீஸும் பிறப்பிக்கப்படாத முந்தைய வழக்கை மேற்கோள் காட்டினார். மேலும், டார்செம் லால் தீர்ப்பில் விளக்கப்பட்டுள்ளபடி, தற்போதைய வழக்கில் பிரிவு 223 இன் படி நோட்டீஸ் அனுப்புவதை அவர் ஆதரித்தார்.
இந்த வழக்கு மே 8ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, சாம் பிட்ரோடா, சுமன் துபே மற்றும் யங் இந்தியன் மற்றும் டோடெக்ஸ் மெர்ச்சண்டைஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட பலர் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
முன்னதாக, 2025 ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி சோனியா மற்றும் ராகுல் காந்தி குடும்பத்தினர் மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ‘இது காங்கிரஸின் கருத்துக்கள் அல்ல’; காங்கிரஸ் அதிரடி அறிக்கை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com