Delhi rains: டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை காரணமாக ரோடுகள் வெள்ளக்காடாய் காட்சியளித்தன.
Delhi rains: டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை காரணமாக ரோடுகள் வெள்ளக்காடாய் காட்சியளித்தன.
Published on: September 30, 2025 at 11:19 pm
புதுடெல்லி, செப்.30, 2025: பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் விஜய்குமார் மல்கோத்ரா என்கிற வி.கே.மல்கோத்ரா, பா.ஜனதாவின் தாய் அமைப்பான ஜனசங்க காலத்தில் இருந்தே அதில் இருந்து வந்தார். பா.ஜனதாவை வளர்த்தவர்களில் மிக முக்கியமான இவர் வயது மூப்பு காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 93.
ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி
இவரது உடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அங்கு பல்வேறு தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : விமானப் பணிப்பெண்களுடன் செல்பி.. மாணவிகளுக்கு தொல்லை.. யார் இந்த டெல்லி சாமியார்?
வி.கே.மல்கோத்ரா பா.ஜனதாவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார். எல்.கே.அத்வானி மற்றும் மதன்லால் குரானா ஆகியோருடன் சேர்ந்து டெல்லியில் பா.ஜனதா வளர்ச்சிக்கு காரணகர்த்தாவாக இருந்தார். டெல்லியில் 5 முறை எம்.பி.யாகவும், 2 முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார்.
மன்மோகன் சிங்கை வென்றவர்
1999-ம் ஆண்டு டெல்லியில் மன்மோகன் சிங்கை மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கொண்டது பெரிதாக பேசப்பட்டது. அரசியலில் மட்டுமின்றி விளையாட்டுத்துறையிலும் இந்திய ஒலிம்பிக் சங்கம், வில்வித்தை சங்கம், அகில இந்திய விளையாட்டு கவுன்சில் போன்றவற்றில் பல பொறுப்புகளை வகித்துள்ளார். இவர் ஆசிரியராக பணியை தொடங்கி ஆர்.எஸ்.எஸ் காரியகர்த்தாவாக விளங்கியவர்.
மேலும், இவரும், எல்.கே.அத்வானி போல லாகூரில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 17 வயது மகளுக்கு நேர்ந்த கொடூரம்.. தந்தை- மகன் கைது.. ஆணவ படுகொலையா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com