Rajnath singh: “பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் பிரம்மோஸ் எல்லைக்குள் இருக்கின்றன; ஆபரேஷன் சிந்தூர் ட்ரெய்லர்தான்” என எச்சரித்துள்ளார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
Rajnath singh: “பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் பிரம்மோஸ் எல்லைக்குள் இருக்கின்றன; ஆபரேஷன் சிந்தூர் ட்ரெய்லர்தான்” என எச்சரித்துள்ளார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
Published on: October 18, 2025 at 11:36 pm
லக்னோ, அக்.18, 2025: பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் பிரம்மோஸ் ஏவுகணைகளின் எல்லைக்குள் உள்ளது; ஆபரேஷன் சிந்தூரின்போது நடந்தது வெறும் ட்ரெய்லர் மட்டுமே” என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை லக்னோவில் கூறினார்.
மேலும், “இந்தியாவிற்கு வெற்றி ஒரு பழக்கமாகிவிட்டது என்பதை இந்த நடவடிக்கை நிரூபித்துள்ளது” என்றார் ராஜ்நாத் சிங்.
உத்தரப் பிரதேச தலைநகர் சரோஜினி நகரில் உள்ள பிரம்மோஸ் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை வசதி மையத்தில் தயாரிக்கப்பட்ட நான்கு பிரம்மோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுதியை பாதுகாப்பு அமைச்சர், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
लखनऊ का स्ट्रैटेजिक मटेरियल टेक्नोलॉजी कॉम्प्लेक्स, उत्तर प्रदेश के औद्योगिक नक्शे पर एक नया आयाम जोड़ने वाला है। इससे एक नई इनोवैशन चेन भी बनेगी, जो न केवल रक्षा तकनीक में आत्मनिर्भर भारत का सपना पूरा करेगी, बल्कि देश की अर्थव्यवस्था को भी नई उड़ान देगी। आने वाले समय में उत्तर… pic.twitter.com/9dNUmioare
— Rajnath Singh (@rajnathsingh) October 18, 2025
அப்போது, சிந்தூர் நடவடிக்கையில் பிரம்மோஸின் பங்கை எடுத்துரைத்த சிங், ஏவுகணை ஒரு சோதனைக்கு அப்பால் சென்று தேசிய பாதுகாப்பின் மிகப்பெரிய நடைமுறை சான்றாக மாறியுள்ளது என்பதை நிரூபித்ததாகக் கூறினார்.
தொடர்ந்து, ராஜ்நாத் சிங், “வெற்றி நமக்கு ஒரு பழக்கமாகிவிட்டது என்பதற்கு ஆபரேஷன் சிந்தூர் சான்றாகும், இப்போது நாம் நமது திறன்களை மேலும் மேம்படுத்த வேண்டும்.
இந்த நடவடிக்கை வெறும் டிரெய்லர். இது பாகிஸ்தானுக்கு என்ன நடக்கக்கூடும் என்பதை உணர வைத்துள்ளது” என்றார்.
இதையும் படிங்க : பீகார் சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு.. போஜ்புரி நடிகை வேட்புமனு தள்ளுபடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com