Droupadi Murmu rejected the mercy petition: இரண்டு வயது குழந்தையிடம் தவறாக நடந்த குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு.
Droupadi Murmu rejected the mercy petition: இரண்டு வயது குழந்தையிடம் தவறாக நடந்த குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு.

Published on: December 18, 2025 at 7:27 pm
புதுடெல்லி, டிச 18, 2025: மகாராஷ்டிரா மாநிலத்தில் 2012 ஆம் ஆண்டு, இரண்டு வயது குழந்தையை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற குற்றவாளியின் கருணை மனுவை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நிராகரித்தார்.
2012 ஆம் ஆண்டு குழந்தை கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில், ரவி அசோக் குமாரே என்பவருக்கு மரண தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி சூரிய காந்த் (தற்போதைய தலைமை நீதிபதி) அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த மரண தண்டனையை உறுதி செய்து இருந்தது. இந்த வழக்கில் அரசின் தரப்பில் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் தெளிவாக வைக்கப்பட்டன.
இந்த நிலையில், தனது மரண தண்டனைக்கு எதிராக ரவி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி இருந்தார். இந்த கருணை மனுவை ஜனாதிபதி திரௌபதி நிராகரித்துள்ளார். குடியரசு தலைவராக திரௌபதி பதவியேற்ற பின்பு நிராகரிக்கப்பட்ட மூன்றாவது கருணை மனு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்.. குற்றப் பத்திரிகையில் இடம்பெற்ற 3 பெயர்கள்.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com