President Droupadi Murmu: மேற்கு வங்க மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய திருத்த மசோதாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரித்துள்ளார்.
President Droupadi Murmu: மேற்கு வங்க மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய திருத்த மசோதாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரித்துள்ளார்.

Published on: December 15, 2025 at 7:17 pm
புதுடெல்லி, டிச.15, 2025: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மேற்கு வங்க மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய திருத்த மசோதாவை நிராகரித்துள்ளார். அந்த மசோதாவில், மாநிலப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் (Chancellor) பதவியில் ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சரின் பெயரைச் சேர்க்கும் வகையில் முன்மொழியப்பட்டது.
கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் அலுவலகத்திலிருந்து கிடைத்த தகவலின்படி, ஆளுநர் டாக்டர் சி.வி. போஸ், 2024 ஏப்ரல் 20ஆம் தேதி அந்த மசோதாவை குடியரசுத் தலைவர் பரிசீலனைக்காக ஒதுக்கியிருந்தார்.
அதேபோல், அலியாஹ் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய மற்றொரு திருத்த மசோதாவும், துணைவேந்தர் பதவியில் ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சரை நியமிக்க முன்மொழிந்தது. அந்த மசோதாவையும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரித்துள்ளார்.
இதையும் படிங்க : பா.ஜ.க புதிய செயல் தலைவர்.. யார் இந்த நிதின் நபின்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com