Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி இன்று மும்பையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன்-ஐ சந்திக்கிறார்.
Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி இன்று மும்பையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன்-ஐ சந்திக்கிறார்.

Published on: February 17, 2026 at 1:25 pm
மும்பை, பிப்.17, 2026: பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) மும்பையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனை சந்தித்து பேசுகிறார். இந்தச் சந்திப்பில், இந்தியா-பிரான்ஸ் மூலோபாய கூட்டாண்மையில் ஏற்பட்ட முன்னேற்றங்களை இரு தலைவர்களும் பரிசீலித்து, பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கிய பிரச்சினைகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஏ.ஐ இம்பேக்ட் மாநாட்டில் பங்கேற்கிறார். இது மேக்ரோனின் இந்தியாவுக்கான நான்காவது பயணம் ஆகும். மேலும் மும்பைக்கு அவர் வரும் முதல் பயணம் ஆகும். அவர்களின் விவாதங்கள் மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துவதிலும், புதிய மற்றும் உருவாகும் துறைகளில் அதை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தும்.
இந்த நிலையில், மாலை நேரத்தில், இரு தலைவர்களும் இந்தியா-பிரான்ஸ் புதுமை ஆண்டு 2026-ஐ தொடங்கி, இரு நாடுகளின் வணிகத் தலைவர்கள், தொடக்க நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிற புதுமையாளர்களைச் சந்தித்து உரையாற்றுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சோரோஸ் ஃபவுண்டேஷன் தொடர்பு.. ராகுல் பதவியை ரத்து செய்க.. நிஷிகாந்த் துபே!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com