Narendra modi: பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்.11, 2025) வாரணாசியில் மொரீஷியஸ் பிரதமரை வரவேற்கிறார், பின்னர், இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார்.
Narendra modi: பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்.11, 2025) வாரணாசியில் மொரீஷியஸ் பிரதமரை வரவேற்கிறார், பின்னர், இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார்.
Published on: September 11, 2025 at 11:09 am
புதுடெல்லி, செப்.11 2025: பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்.11, 2025) வாரணாசியில் மொரீஷியஸ் பிரதமர் நவின்சந்திர ராம்கூலமை வரவேற்கிறார், மேலும் அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் சுமார் இரண்டு மணி நேரம் நீடிக்கும், அதன் பிறகு பிரதமர் மோடி டேராடூனுக்குப் புறப்பட்டு, உத்தரகண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக ஆய்வு செய்வார்.
இந்த நிலையில், இரு தலைவர்களும் இருதரப்பு ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்வார்கள், மேம்பாட்டு கூட்டாண்மை மற்றும் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துவார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் சுகாதாரம், கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், எரிசக்தி, உள்கட்டமைப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் நீலப் பொருளாதாரம் குறித்து பேசுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை மும்பை வந்தடைந்த ராம்கூலமின் அரசுமுறைப் பயணம் செப்டம்பர் 16 ஆம் தேதி நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் vs வங்கி எஃப்.டி. எது பெஸ்ட் முதலீடு?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com