Paper Leak Bill: வினாத்தாள் கசிவு சம்பவங்களைத் தடுக்க விரைவு நீதிமன்றங்கள், கடுமையான தண்டனைகள் உள்ளிட்ட அம்சங்களுடன் புதிய மசோதா கொண்டு வரப்படவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
Paper Leak Bill: வினாத்தாள் கசிவு சம்பவங்களைத் தடுக்க விரைவு நீதிமன்றங்கள், கடுமையான தண்டனைகள் உள்ளிட்ட அம்சங்களுடன் புதிய மசோதா கொண்டு வரப்படவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Published on: July 24, 2026 at 12:55 pm
புதுடெல்லி, ஜூலை 24, 2026: வினாத்தாள் கசிவு சம்பவங்களைத் தடுக்க மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வர உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளதாவது, கடந்த இரண்டரை மாதங்களில் வினாத்தாள் கசிவு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருப்பதாகவும் கூறினார்.
More strict actions against paper leaks to come in tomorrow’s Cabinet! pic.twitter.com/NRysBukk5U
— Narendra Modi (@narendramodi) July 23, 2026
மேலும், மாணவர்கள் ஒரு கல்வியாண்டை இழக்காமல் இருப்பதே அரசின் முதல் பொறுப்பு என்பதால், தேர்வுகளை விரைவாக நடத்துவது அவசியமாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். வினாத்தாள் கசிவு என்பது சாதாரண குற்றம் அல்ல; லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தும் பிரச்சினை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து, விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது மற்றும் வினாத்தாள் கசிவில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவது உள்ளிட்ட அம்சங்களுடன் சட்ட முன்வடிவைத் தயாரிக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட்டதாக அவர் தெரிவித்தார். அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி, சட்ட முன்வடிவை நேற்று இரவு தமக்கு சமர்ப்பித்ததாகவும் கூறினார்.
இந்த சட்ட முன்வடிவு இன்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும், அமைச்சர்களின் ஆலோசனைகள் இணைக்கப்பட்ட பிறகு இறுதி வடிவம் பெறும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். அடுத்த வாரம் நாடாளுமன்றத்தின் இரண்டாவது வாரக் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், இந்த மசோதாவை விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க : 26 நாள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்த சோனம் வாங்சுக்..போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு கிடையாது.. மத்திய அரசு உறுதி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com