Pahalgam terror attack: ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 5 பயங்கரவாதிகளின் வீடுகள், பாதுகாப்புப் படையினரால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.
Pahalgam terror attack: ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 5 பயங்கரவாதிகளின் வீடுகள், பாதுகாப்புப் படையினரால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.
Published on: April 26, 2025 at 1:15 pm
ஜம்மு, ஏப்.25 2025: ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் ஏப்.22ஆம் தேதி நடந்த கொடூர தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் சனிக்கிழமை (ஏப்.26 2025) 5 பயங்கரவாதிகளின் வீட்டை இடித்து தரைமட்டமாக்கியது. அந்த வகையில், ஷோபியனின் சோட்டிபோரா கிராமத்தில் ஷாஹித் அகமது குட்டேயின் வீடு பாதுகாப்புப் படையினரால் இடிக்கப்பட்டது.
முன்னதாக, வெள்ளிக்கிழமை (ஏப்.25 2025) இரவு குல்காம், ஷோபியன் மற்றும் புல்வாமாவில் தலா ஒருவர் என மூன்று பயங்கரவாதிகளின் வீடுகளை சட்ட அமலாக்க அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். அதேபோல், வெள்ளிக்கிழமை, இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டன. இதற்கிடையில், இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளான அடில் உசேன் தோக்கர் மற்றும் ஆசிப் ஷேக் ஆகியோரின் வீடுகளுக்குள் அங்கு ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடித்தன எனக் கூறப்பட்டது.
அடில் 2018 இல் பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக பயணம் செய்ததாகவும், கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்குத் திரும்புவதற்கு முன்பு அங்கு பயங்கரவாதப் பயிற்சி பெற்றதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: இந்திய ராணுவம் பதிலடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com