முர்ஷிதாபாத் செல்லாதது ஏன்? இந்துக்கள் மீது வெறுப்பா? மம்தா பானர்ஜிக்கு பா.ஜ.க கேள்வி

BJP accuses Mamata Banerjee: இந்துக்கள் மீதான வெறுப்பின் காரணமாக முர்ஷிதாபாத் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை வேண்டுமென்றே மம்தா பானர்ஜி புறக்கணிக்கிறார் என பாரதிய ஜனதா கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

Published on: April 21, 2025 at 7:57 pm

புதுடெல்லி, ஏப்.21 2025: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது திங்கள்கிழமை (ஏப்.21 2025) பாரதிய ஜனதா கடும் தாக்குதலை தொடுத்தது. அக்கட்சியின் மாநிலத் தலைவர், ”இந்துக்கள் மீதான வெறுப்பின் காரணமாக முர்ஷிதாபாத் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை வேண்டுமென்றே மம்தா பானர்ஜி புறக்கணித்தார்” என்றார்.

புது டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய பாஜக எம்.பி.யும் தேசிய செய்தித் தொடர்பாளருமான சம்பித் பத்ரா, “மம்தா பானர்ஜி இந்துக்களை வெறுக்கிறார்” என்றார். தொடர்ந்து, “முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராக இதுபோன்ற அட்டூழியங்கள் நடத்தப்பட்டிருந்தால், பானர்ஜி அங்கேயே கிளர்ச்சி செய்து முகாமிட்டிருப்பார்” எனவும் விமர்சித்தார்.

மேலும், “பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்கள் என்பதால் அவர்களை இடதுசாரிகளும் ஒதுக்கி வைத்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

முர்ஷிதாபாத் வன்முறை

2025 ஏப்ரல் 11ஆம் தேதியன்று, வக்ஃப் (திருத்த) சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, ​​மேற்கு வங்காளத்தின் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் முர்ஷிதாபாத்தில் வன்முறை வெடித்தது.

இந்தப் போராட்டம் கலவரமாக மாறியது. இதில் தந்தை மகன் என 2 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு தேடி தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்திய தேர்தல் ஆணையம் சமரசம்; அமெரிக்காவில் ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு!

நிலுவை வழக்குகளை குறைக்க நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அவசியம்.. உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா!
Justice Nagarathna

நிலுவை வழக்குகளை குறைக்க நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அவசியம்.. உச்ச நீதிமன்ற நீதிபதி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com