Mallikarjun Kharge : ஆர்.எஸ்.எஸ் மீதான அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
Mallikarjun Kharge : ஆர்.எஸ்.எஸ் மீதான அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Published on: April 2, 2026 at 10:57 am
Updated on: April 2, 2026 at 10:58 am
புதுடெல்லி, ஏப்.2, 2026: காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, புதுடெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் பதில் மனு ஒன்றை தனது வழக்கறிஞர் மூலமாக, புதன்கிழமை (ஏப்.1) தாக்கல் செய்தார். அவர் மீது பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ் மீது அவதூறு பரப்பியதாக ரவீந்தர் குப்தா என்பவர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு, திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மல்லிகார்ஜூன் கார்கே மீது வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதனை நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில் இது தொடர்பாக மேல்முறையீடு மனு ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவில் மல்லிகார்ஜூன் கார்கே தரப்பு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. .இதனை தொடர்ந்து, சிறப்பு நீதிபதி ஜிதேந்திர சிங், வழக்கை அடுத்த விசாரணைக்காக ஏப்ரல் 15, 2026-க்கு ஒத்திவைத்தார். கார்கேவின் சார்பில் வழக்கறிஞர்கள் ஓமர் ஹோடா மற்றும் உதய் பாட்டியா பதிலை சமர்ப்பித்தனர். புகார்தாரர் தரப்பில், வழக்கறிஞர் ககன் காந்தி ஆஜரானார்.
இதையும் படிங்க: பா.ஜ.க எம்.பி சுரேஷ் கோபிக்கு சிக்கல்.. செக் வைத்த இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com