Ganesh Kumar: கேரளா போக்குவரத்து அமைச்சர் கே பி கணேஷ் குமார் மீது அவரது மனைவி துரோக குற்றம் சாட்டியதை தொடர்ந்து அவரது மனைவி பிந்து மேனனை அழைத்து மன்னிப்பு கேட்டார்.
Ganesh Kumar: கேரளா போக்குவரத்து அமைச்சர் கே பி கணேஷ் குமார் மீது அவரது மனைவி துரோக குற்றம் சாட்டியதை தொடர்ந்து அவரது மனைவி பிந்து மேனனை அழைத்து மன்னிப்பு கேட்டார்.

Published on: March 10, 2026 at 2:17 pm
திருவனந்தபுரம், மார்ச் 10 2026: கேரள போக்குவரத்து அமைச்சர் கே பி கணேஷ் குமாருக்கு எதிராக அவரது மனைவி பிந்து மேனன் துரோக குற்றச்சாட்டு முன்வைத்தார். அவர் திருமணத்திற்குப் புறம்பான உறவில் தனது கணவர் இருந்ததாகவும் இதுகுறித்து போலீசார் உதவிக்கோரியும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக வந்த இந்த குற்றச்சாட்டுகள் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியது.
மேலும் அமைச்சரே ராஜினாமா செய்யக்கோரி யு டி எஃப் கூறியது. இந்நிலையில் இது தேர்தலுக்கு முந்திய சதி என்றும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் தலையிட முடியாது என்றும் கணேஷ்குமார் கூறினார். இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய பிந்து மேனன் அமைச்சர் கணேஷ் குமார் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டதை உறுதிப்படுத்தினார். மேலும் சட்ட நடவடிக்கைக்கு பதிலாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை என்றும் அதைத்தான் நான் விரும்பினேன் நான் ஒருபோதும் சட்ட நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை பழிவாங்கவும் விரும்பவில்லை என்று கூறினார்.
இதையும் படிங்க: ஈரான்- அமெரிக்கா மோதல்.. ஒன்றுகூடிய ராகுல், அகிலேஷ்.. அதிர்ந்த நாடாளுமன்றம்!
யாருடைய நட்பெயரையும் கெடுக்கும் அல்லது அரசாங்கத்திற்கு ஒரு போதும் களங்கம் விளைவிப்பது எனது நோக்கம் அல்ல, நான் அமைச்சருடன் தொடர்ந்து வாழ்வேன். அதனால் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் மற்றவர்கள் தனது தனியுரிமையை மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
திங்கட்கிழமை அவர் குற்றம் சாட்டியது குறித்து விளக்கிய அவர் அது தன்னுடைய உணர்ச்சியின் வெளிப்பாடு என்று விவரித்தார் தொடர்ந்து வேறெந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்றும் கூறினார். இதனால் அமைச்சரின் ராஜினாமா குறித்த யுகங்கள் முடிவுக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க: பிப்.28ஆம் தேதி 3 கப்பல்களுக்கு அனுமதி கோரிய ஈரான்.. ஜெய்சங்கர் தகவல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com