Waqf Law Amendment Act: வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக, டெல்லி உச்ச நீதிமன்றத்தில் இந்து அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது. அதில்,….
Waqf Law Amendment Act: வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக, டெல்லி உச்ச நீதிமன்றத்தில் இந்து அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது. அதில்,….
Published on: May 5, 2025 at 5:43 pm
திருவனந்தபுரம், மே 5 2025: கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீ நாராயண மானவ தர்மம் அறக்கட்டளை, வஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த சட்டம் இந்தியாவில் இஸ்லாமிய சமூகத்தின் இருப்பை ஆபத்தில் ஆழ்த்தும் என்று அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
ஸ்ரீ நாராயண குருவின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு, சமூக நலனுக்காக இந்த அறக்கட்டளை 2023-ல் தொடங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக இந்திய முஸ்லிம் சமூகத்தின் மீதும் நமது நாட்டில் சமூக நீதியின் மீதும் எடுக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட சட்டத்தின் பேரழிவு தாக்கத்தை சாதாரணமாக பார்க்க முடியாது” என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அவர்கள், வஃப் திருத்த சட்டம் முஸ்லிம் சமூகத்தின் பொருளாதார ஆதாரமான வஃப் அமைப்புகளை அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதால், சமூக நலனுக்கு எதிராக உள்ளது. இந்த சட்டம் மிகவும் கடுமையானது.
எந்தவொரு பிரிவினரின் மீதும் அத்தகைய திட்டத்தைத் திணிக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. எனவே பிரிவுகள் 21, 25, 26 மற்றும் 29(1) இன் கீழ் முஸ்லிம் சமூகத்தின் அரசியலமைப்பு உரிமைகளை மீறுகிறது என்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பல அரசியல் கட்சிகள் மற்றும் மத அமைப்புகள் வஃப் திருத்த சட்டத்தினை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. வக்ஃப் திருத்த சட்டம் 2025, நம்பிக்கை மற்றும் வழிபாட்டு விஷயங்களை தொடாமல், இஸ்லாமியர்களின் அத்தியாவசிய மத நடைமுறைகளை மதிக்கிறது. எனவே சட்டத்திற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்யக்கோரி அரசு உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஹிமான்ஷிக்கு எதிர்ப்பு; தேசிய பெண்கள் ஆணையம் கண்டனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com