கேரள நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ மீது நடிகை பாலியல் புகார் அளித்துள்ளார்.
February 6, 2025
கேரள நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ மீது நடிகை பாலியல் புகார் அளித்துள்ளார்.
Published on: August 29, 2024 at 6:21 pm
Updated on: August 29, 2024 at 6:31 pm
Marxist MLA Mukesh | அண்டை மாநிலமான கேரள சினிமாவில் தற்போது புயல் வீசிவருகிறது. சினிமா தொடர்பான ஹேமா அறிக்கையை தொடர்ந்து, நடிகர் சித்திக் மீதான பாலியல் புகார்கள் வெளிவந்தன. இதையடுத்து நடிகர் சித்திக் மீது திருவனந்தபுரத்தில் உள்ள மியூசியம் காவல் நிலையத்தில் பாலியல் வன்புணர்வு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வுமான முகேஷூம் பாலியல் புகாரை எதிர்கொள்கிறார். அவர் மீது துணை நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த நிலையில் அவர் கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்கியுள்ளது. 15 ஆண்டுகள் கழித்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதை சுட்டிக்காட்டி அவருக்கு, நீதிமன்றம் செப்டம்பர் 3 வரை கைது செய்ய தடை வழங்கியுள்ளது.
சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) இந்த வழக்குகளை விசாரிக்க கேரள அரசால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கேரள நடிகைகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரிக்கும் அமைப்பிலும் முகேஷ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கேரளத்தில் அடுத்த சலசலப்பு; செக்ஸ் புகார்: சிக்கலில் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com