MUDA case: மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (MUDA) வழக்கில் லோக்ஆயுக்தா போலீசாரின் விசாரணையைத் தொடர கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டடுள்ளது. இது, கர்நாடக மாநில முதலமைச்சர் சித்த ராமையாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
MUDA case: மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (MUDA) வழக்கில் லோக்ஆயுக்தா போலீசாரின் விசாரணையைத் தொடர கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டடுள்ளது. இது, கர்நாடக மாநில முதலமைச்சர் சித்த ராமையாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Published on: April 15, 2025 at 6:16 pm
பெங்களூரு, ஏப்.15 2025: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் நீதிமன்ற தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதாவது, மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (MUDA) வழக்கில் லோக்ஆயுக்தா காவல்துறை தனது விசாரணையைத் தொடர பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஏப்.15 2025) அனுமதி அளித்துள்ளது.
இதற்கிடையில், மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் நில ஒதுக்கீடு வழக்கில் சித்தராமையா எந்தத் தவறும் செய்யவில்லை என்று கர்நாடக லோக்ஆயுக்தா காவல்துறை தாக்கல் செய்த ‘பி ரிப்போர்ட்’க்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்த மனுவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சித்த ராமையா மனைவி மீதும் குற்றச்சாட்டு
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தால் நிலம் ஒதுக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக சித்த ராமையா மனைவி மீதும் புகார்கள் உள்ளன. சமூக ஆர்வலர் ஆர்வலர் சினேகமாயி கிருஷ்ணா தாக்கல் செய்த புகாரின் பேரில் லோக்ஆயுக்தா விசாரணையைத் தொடங்கியுள்ளது.
முன்னதாக, 2025 பிப்ரவரி மாத தொடக்கத்தில், மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி பி.எம் மற்றும் பிறருக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று லோக்ஆயுக்தா காவல்துறை கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு; காங்கிரஸ் எம்.பி இம்ரான் மசூத் வழக்கு..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com