Tirupathi laddu Issue | திருப்பதி கோவில் நெய்யில் கலப்படம் என்ற செய்தி, சந்திரபாபு நாயுடுவின் 100 நாள் ஆட்சியின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்பும் முயற்சி என முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Tirupathi laddu Issue | திருப்பதி கோவில் நெய்யில் கலப்படம் என்ற செய்தி, சந்திரபாபு நாயுடுவின் 100 நாள் ஆட்சியின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்பும் முயற்சி என முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.
Published on: September 20, 2024 at 4:44 pm
Updated on: September 20, 2024 at 4:48 pm
Tirupathi laddu Issue | ஆந்திராவில் உள்ள உலக பிரசித்தி பெற்ற திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படும். இந்த லட்டில் தரமற்ற நெய் கலக்கப்பட்டுள்ளது என தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறினார். இவரின் குற்றச்சாட்டு வழுத்த நிலையில் திருப்பதி கோவிலில் நெய் பரிசோதிக்கப்பட்டது. இதில் நெய்யில் விலங்கின் கொழுப்பு, மீன் கொழுப்பு மற்றும் சோயா பீன்ஸ் உள்ளிட்ட கலப்பட வகைகள் இருந்தது உறுதியானது.
நாடு முழுக்க இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது தொடர்பாக ஜெகன்மோகன் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது எங்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன என குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, ” எங்கள் ஆட்சியில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன; அதனை இந்த நாயுடு அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது.
விவசாய பெருங்குடி மக்களுக்கு ஒய் எஸ் ஆர் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதில் ஒன்று விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம். இந்தத் திட்டத்தையும் சந்திரபாபு நாயுடு அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது. அவர் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் முடிந்து விட்டன. இந்த நூறு நாட்களுக்குள் அவரின் ஆட்சி மீது மக்களுக்கு கடும் அதிருப்தி நிலவுகிறது. இந்த அதிருப்தியை மறைக்கவும், இதிலிருந்து மக்களை திசை திருப்பவும் கலப்பட நெய் புகாரை எழுப்புகின்றனர்” என்றார்.
உரிய நடவடிக்கை
திருப்பதி நெய்யில் கலப்பட புகார் எழுந்துள்ள நிலையில் இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். மேலும் தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
இதையும் படிங்க : திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு; மீன் எண்ணெய்: ஆய்வில் உறுதி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com