கோவா, மும்பைக்கு கனமழை எச்சரிக்கை; டெல்லியில் வெப்பம் தணியுமா?

IMD issues red alert for Goa: கோவாவுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மும்பையில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் வெபப்ம் தணியுமா?

Published on: May 24, 2025 at 11:19 am

புதுடெல்லி, மே 24 2025: டெல்லியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், கோவாவுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மும்பைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அஸ்ஸாம், மேகாலயா, கடலோர கர்நாடகா, கேரளா, மஹே மற்றும் மத்திய மகாராஷ்டிரா ஆகிய இடங்களில் சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மும்பைக்கு ஆரஞ்சு அலர்ட்

இந்நிலையில், மும்பை, தானே, பால்கர், சிந்துதுர்க் மற்றும் புனே மற்றும் சதாரா மலைப்பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பகுதிகளில் பலத்த மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் மணிக்கு 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கோவாவுக்கு ரெட் அலர்ட்

இதற்கிடையில், மே 23 முதல் 29 வரை கொங்கண் மற்றும் கோவாவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளா மற்றும் ஆந்திரா

வெள்ளிக்கிழமை (மே 23 2025) கேரளாவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் மாலையில் மூன்று மணி நேரத்திற்கு ஐஎம்டி சிவப்பு எச்சரிக்கை விடுத்தது,

ஆந்திராவை பொறுத்தமட்டில் மே 23 முதல் 27 வரை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், மின்னலுடன் மணிக்கு 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மே 1 முதல் 21 வரை மாநிலத்தில் ஏற்கனவே ‘பெரிய அளவு அதிகப்படியான’ மழை பதிவாகியுள்ளது, சராசரியாக 88.5 மிமீ மழை பெய்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் வழக்கமான மழைப் பொழிவு 39.2 மிமீ ஆகும்.

இதையும் படிங்க : டெல்லியில் கோவிட் அச்சம்; மருத்துவமனைகள் தயார் நிலை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com