Vote Theft In Bihar: பீகாரில் ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்திய அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
Vote Theft In Bihar: பீகாரில் ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்திய அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
Published on: August 17, 2025 at 6:25 pm
பாட்னா, ஆக.17 2025: பீகார் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்) நடவடிக்கையில் வாக்கு திருட்டு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை இந்திய தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை (ஆக.17 2025) கடுமையாகக் கண்டித்துள்ளது.
“இது இந்திய அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்” என்று தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். மேலும், தேர்தல் ஆணையமும் வாக்காளர்களும் அற்ப அரசியலுக்கு பயப்படுவதில்லை என்றும் அவர் கூறினார்.
தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து தேர்தல்களை திருடுகிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், தேர்தல் ஆணையர் இதுதொடர்பாக பதிலளித்துள்ளார். இது குறித்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர், “இந்த சரிபார்க்கப்பட்ட ஆவணங்கள், அரசியல் கட்சிகளின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்ட பூத் ஏஜென்ட்களின் சான்றுகள், அவற்றின் சொந்த மாநில அல்லது தேசிய அளவிலான தலைவர்களை சென்றடையவில்லை.
மேலும், அடிப்படை யதார்த்தத்தைப் புறக்கணித்து குழப்பத்தை பரப்ப முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பது மிகவும் கவலைக்குரிய விஷயம்” என்றார். தொடர்ந்து, “உண்மை என்னவென்றால், பீகாரின் சிறப்பு திருத்தத்தை-ஐ முழுமையான வெற்றியடையச் செய்ய அனைத்து பங்குதாரர்களும் படிப்படியாக உறுதிபூண்டு, முயற்சி செய்து, கடினமாக உழைத்து வருகின்றனர்” என்றும் அவர் கூறினார்.
அற்ப அரசியல்.. அரசியலமைப்பு அவமதிப்பு
இந்த நிலையில், அற்ப அரசியலுக்காக இந்திய அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டது என்று கூறிய தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையமும் வாக்காளர்களும் இதனை பார்த்து பயப்பட மாட்டார்கள்” என்றார்.
இதையும் படிங்க : மத்தியப் பிரதேசத்தில் சீக்கிய குடும்பம் மீது தாக்குதல்? போலீஸ் மீது குற்றச்சாட்டு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com