Delhi: டெல்லியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போலிச் சாமியார் தலைமறைவாகி விட்டார்.
Delhi: டெல்லியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போலிச் சாமியார் தலைமறைவாகி விட்டார்.
Published on: September 24, 2025 at 1:01 pm
புதுடெல்லி, செப்.24, 2025: டெல்லியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலிச் சாமியார் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
டெல்லியில் தன்னைத் தானே சாமியார் என அறிவித்துக்கொண்டு வலம்வந்தவர் சைதன்யானந்தா சரஸ்வதி. இவரின் இயற்பெயர் பார்த்த சாரதி ஆகும். இவர் தன்னுடைய கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
VIDEO | Delhi Police has booked a self-styled godman, Swami Chaitanyananda Saraswati alias Parth Sarthy, after several female students of a management institute accused him of sexual harassment. Despite raids and surveillance, the accused remains on the run.
— Press Trust of India (@PTI_News) September 24, 2025
Visuals show Swami… pic.twitter.com/LxahSF2CCv
(நன்றி: பி.டி.ஐ)
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார், போலிச்சாமியார் பார்த்த சாரதியை கைது செய்ய நடவடிக்கைகள் எடுத்தனர். இந்நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டார். அவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போலிச் சாமியார் பார்த்த சாரதி நிறுவனங்களில் ரெய்டும் நடந்தது. தற்போது அவர் காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க : கல்லூரி மாணவி கூட்டு வன்கொடுமை- கர்ப்பம்.. 5 மாதங்களுக்கு மேலாக நடந்த கொடூரம்.. 7 பேர் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com