Delhi Fire Near Palam Metro: டெல்லி பாலம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் சிக்கியுள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
Delhi Fire Near Palam Metro: டெல்லி பாலம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் சிக்கியுள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

Published on: March 18, 2026 at 11:27 am
புதுடெல்லி, மார்ச் 18, 2026: டெல்லி பாலம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் சிக்கியுள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து, தீ கட்டுப்பாட்டு அறை அதிகாரி கூறுகையில், “காலை 7 மணியளவில் நம்பர்-2, ஸ்ரீ ராம் சௌக் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக அழைப்பு வந்தது” என்றார்.
மேலும், “இந்தத் தகவலின் பேரில் 30 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. சிலர் கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளனர். சில உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.
தொடர்ந்து, “தெற்கு-மேற்கு மாவட்ட துணை காவல் ஆணையர் அமித் கோயல் கூறுகையில், “கட்டடத்தில் 9-10 பேர் சிக்கி இருக்கலாம் என அஞ்சுகிறோம். மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைபெறுகின்றன” என்றார்.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com