Defence Minister Rajnath Singh: குஜராத்தின் புஜில் உள்ள விமானப்படை நிலையத்தில் விமானப்படை வீரர்களுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாடினார். அப்போது, பாகிஸ்தானுக்கு எதிராக நாம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளோம் என்றார்.
Defence Minister Rajnath Singh: குஜராத்தின் புஜில் உள்ள விமானப்படை நிலையத்தில் விமானப்படை வீரர்களுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாடினார். அப்போது, பாகிஸ்தானுக்கு எதிராக நாம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளோம் என்றார்.
Published on: May 16, 2025 at 2:29 pm
Updated on: May 16, 2025 at 2:31 pm
புதுடெல்லி, மே 16 2025: குஜராத்தின் புஜில் உள்ள விமானப்படை நிலையத்தில் விமானப்படை வீரர்களுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாடினார். அப்போது, “1965ஆம் ஆண்டுக்கு பிறகு நமது வெற்றியை பாகிஸ்தான் கண்டுள்ளது என்றார்.
ராஜ்நாத் சிங் உரையாடல்
VIDEO | Here's what Defence Minister Rajnath Singh (@rajnathsingh) said while interacting with air warriors at the Air Force Station in Bhuj, Gujarat:
— Press Trust of India (@PTI_News) May 16, 2025
"You all had done a great job during 'Operation Sindoor'. I pay my heartfelt tributes to those martyred during the operation and… pic.twitter.com/VH9GhRp7fV
தொடர்ந்து உரையாடிய ராஜ்நாத் சிங், “’ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது நீங்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றினீர்கள். 1965 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான நமது வெற்றியை புஜ் கண்டது, இன்று மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிரான நமது வெற்றியைக் கண்டுள்ளது” என்றார்.
மேலும், “’ஆபரேஷன் சிந்தூர்’ என்று பிரதமர் நரேந்திர மோடி பெயரிட்டார்” என்றார். தொடர்ந்து, “பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதத்தை ஒழிக்க இந்திய விமானப்படைக்கு வெறும் 23 நிமிடங்கள் மட்டுமே ஆனது” என்றார்.
Addressing the brave Air Warriors at the Air Force Station in Bhuj (Gujarat). https://t.co/3TGhBlyxFH
— Rajnath Singh (@rajnathsingh) May 16, 2025
ஆபரேஷன் சிந்தூர்
பாகிஸ்தானில் உள்ள பயங்கலவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். முன்னதாக 2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.
இந்தத் தாக்குதலில் உள்ளூர் நபர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இதற்கிடையில் ராஜ்நாத் சிங், சர்வதேச நாணய நிதியத்தின் மனிதாபிமான உதவியை பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்துகிறது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க : இந்திய பகுதிகளுக்கு சீன பெயர்; மத்திய அரசு நிராகரிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com