Vikramaditya Singh: இமாச்சலப் பிரதேசத்தின் காங்கிரஸ் அமைச்சர் விக்கிரமாதித்திய சிங், தனது தோழியை மணந்தார்.
Vikramaditya Singh: இமாச்சலப் பிரதேசத்தின் காங்கிரஸ் அமைச்சர் விக்கிரமாதித்திய சிங், தனது தோழியை மணந்தார்.
Published on: September 23, 2025 at 11:41 am
சிம்லா, செப்.22, 2025: இமாச்சலப் பிரதேச பொதுப்பணி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் விக்ரமாதித்ய சிங், இன்று (செப். 22, 2025) சண்டிகரில் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இவர், இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வராக 6 முறை இருந்த ராஜா வீரபத்ர சிங்கின் மகன் ஆவார். மணமகள், அம்ரீன் செகோன், ஆங்கிலம் மற்றும் உளவியலில் இரட்டை முதுகலைப் பட்டம் பெற்ற புகழ்பெற்ற கல்வியாளர் ஆவார்.
இவர், தற்போது, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக உள்ளார். மேலும், இவர் விக்ரமாதித்யாவின் பழைய தோழியும் ஆவார். செகோன் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலும் படித்துள்ளார். அவர் சர்தார் ஜோதிந்தர் சிங் செகோன் மற்றும் ஓபிந்தர் கவுரின் மகள்.அக்டோபர் 17, 1989 இல் பிறந்த விக்ரமாதித்ய சிங், தனது தந்தை வழியில் காங்கிரஸில் பயணிக்கிறார்.
இவர், தற்போது இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் சிம்லா கிராமப்புறத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும், அமைச்சரவையில் பொதுப்பணி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைகளை கவனிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஒரே நேரத்தில் இரு காதல்.. லிவ்-இன் பார்ட்னர் கொலை.. உடல் ஆற்றில் வீச்சு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com