Rahul Gandhi | Ravneet Singh Bittu | ராகுல் காந்தியை பயங்கரவாதி என விமர்சித்த மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Rahul Gandhi | Ravneet Singh Bittu | ராகுல் காந்தியை பயங்கரவாதி என விமர்சித்த மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on: September 19, 2024 at 4:44 pm
Rahul Gandhi | Ravneet Singh Bittu | காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் வியாழக்கிழமை (செப். 19, 2024) தெரிவித்தனர்.
கர்நாடக காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரவ்னீத் சிங் மீது, “தவறான தகவல், கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சி, சாதி, மொழி இடையே பகைமையை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் சீக்கியர்களின் நிலை குறித்த அறிக்கைகள் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தாக்கிப் பேசிய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத், “ராகுலின் பேச்சுகள் பயங்கரவாதி போல் உள்ளது. அவர்தான் நம்பர் 1 பயங்கரவாதி” என்றார். ரவ்னீத்தின் பேச்சுக்கு அப்போதே காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ரவ்னீத் காங்கிரஸில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ‘ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அனுதாபி கட்சிகளை நிராகரித்த வாக்காளர்கள்’:நரேந்திர மோடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com