முறிந்து விழுந்த விமான சிறகு.. அஜித் பவர் மரணத்தில் ஒளிந்திருக்கும் மூன்று காரணம்.. முழுமையான அலசல்!

Baramati Plane Crash: அஜித் பவர் பயணித்த விமானம், விழுந்து நொறுங்கியதில் அந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தார்கள்.

Published on: January 30, 2026 at 11:45 am

மும்பை, ஜனவரி 30, 2026; மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவர், ஜனவரி 28 2026 நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தார்; இந்த விமான விபத்துக்கு பின்னணியில் உள்ள காரணம் என்ன? விமானம் தொழில்நுட்ப பிரச்சனையில் சிக்கியதா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைகள் காரணமாக அமைந்ததா?

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் நான்கு பேரின் உயிரிழப்புக்கு காரணமான பரமதி விமான விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கருப்பு பெட்டி (Black Box) மீட்கப்பட்டு, விமான விபத்து விசாரணை ஆணையத்தின் (AAIB) மூன்று அதிகாரிகள் தொழில்நுட்ப காரணங்களை ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், பரமதி விமான விபத்தின் புதிய CCTV காட்சி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த காட்சியில், விமானத்தின் இடது சிறகு திடீரென கீழே விழுவது போலவும், அதன் பிறகு விமானம் வானில் ஒரு பக்கம் திரும்பி தரையில் மோதி விபத்துக்குள்ளாகிறது.

இதையும் படிங்க: விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழப்பு.. எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

என்ன காரணம்?

CCTV காட்சியில் தெரியும் சிறகு சாய்வு, இயந்திரக் கோளாறு அல்லது கட்டமைப்பு சிக்கலைக் குறிக்கலாம். மேலும், அந்த நேரத்தில் காட்சி குறைவு மற்றும் வானிலை மோசமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், கருப்பு பெட்டி ஆய்வுக்கு பின்னர் குடல் பதிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு முழுமையான விவரங்கள் தெரியப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த புதிய வீடியோவின் அடிப்படையில், இந்திய விமானிகள் சங்கத்தின் தலைவர் சி.எஸ். ரந்தாவா, ‘ஏரோடைனமிக் ஸ்டால்’ கோட்பாட்டை விளக்கினார். அதில் விமானம் குறைந்த வேகத்தில் கடந்ததால் இதுபோன்ற தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏற்படும் என்றும் இதுவே விமானம் ஒரு பக்கம் சாய காரணமாக அமைந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நாட்டின் வளர்ச்சியை பிரதிபலிக்கும் பொருளாதார ஆய்வறிக்கை.. பிரதமர் நரேந்திர மோடி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com