மத்திய உளவுத்துறையில் பணி; கேரளாவில் இளம் பெண் அதிகாரி மரணம்!

IB officer Megha found dead: மத்திய உளவுத்துறையில் பணிபுரிந்த கேரளாவைச் சேர்ந்த 25 வயதான இளம் பெண் அதிகாரி மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.

Published on: March 25, 2025 at 11:02 pm

திருவனந்தபுரம், மார்ச் 25 2025: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள சக்கா என்ற பகுதியில் தனது தந்தை மதுசூதனன் தாயார் நிஷா ஆகியோருடன் வசித்து வந்தவர் மேகா. இவர்களின் பூர்வீகம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அதிரும்கல் ஆகும்.

25 வயதான மேகாவின் தந்தை மதுசூதனன் ITI கல்லூரி (ஓய்வு) முதல்வர் ஆவார். இவரின் தாயார் நிஷா சந்திரன், அரசு பணியாளர் ஆவார்.

மேகா தனது இளமை நாட்களை பெருமளவு பள்ளியிலும் கல்லூரி விடுதியிலும் கழித்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இவருக்கு கடந்த ஆண்டு மத்திய அரசில் பணி கிடைத்துள்ளது.
மேகா, தடய அறிவியல் பட்டதாரி ஆவார். தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் குடியுரிமை பிரிவில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் திங்கள்கிழமை காலை (மார்ச் 24 2025) ரயில் முன் பாய்ந்து மேகா தனது உயிரை போக்கிக் கொண்டார். இந்தச் சம்பவம் காலை 8:30 மணி முதல் 9 மணிக்குள் நடைபெற்றிருக்கலாம் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ரேகாவின் மாமா சந்தோஷ், மலையாள மனோரமா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், ” என்ன நடந்தது என எங்களுக்கு தெரியவில்லை; மேகா மிகவும் அமைதியானவர். அனாவசியமாக யார் விஷயத்திலும் தலையிட மாட்டார். போலீஸ் விசாரணை முடிவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்றார்.

ரயில்வே போலீசார் நடத்திய முதல் கட்ட தகவலில் மேகா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வழக்குப்பதிவு

மேகாவின் மரணம் தொடர்பாக போலீசார் பாரதிய நியாய சன்கிதா (BNS) சட்டப்பிரிவு 194 இன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் உளவு பிரிவு அதிகாரியான மேகாவின் மரணம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மெகாவின் மரணம் தொடர்பாக அவரது பெற்றோரும் புகார் அளித்துள்ளனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல.

இதையும் படிங்க டெல்லியில் சிறுமி உள்பட 7 வங்கதேச சட்டவிரோத குடியேறிகள் கைது: நாடு கடத்த நடவடிக்கை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com