BJP alleges against Rahul: வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட நிலையை இந்தியாவில் உருவாக்க ராகுல் காந்தி முயற்சிக்கிறார் என பா.ஜ.க. விமர்சித்துள்ளது.
BJP alleges against Rahul: வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட நிலையை இந்தியாவில் உருவாக்க ராகுல் காந்தி முயற்சிக்கிறார் என பா.ஜ.க. விமர்சித்துள்ளது.
Published on: September 18, 2025 at 5:53 pm
புதுடெல்லி, செப்.18, 2025: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு பற்றிய புதிய குற்றச்சாட்டுகளை பாரதிய ஜனதா மறுத்துள்ளது. அதேநேரம், நேபாளம் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளில் ஏற்பட்ட ஒரு சூழ்நிலையை இந்தியாவில் உருவாக்க அவர் தயாராக இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
அதாவது, ராகுல் காந்தி ஜனநாயகத்தை பலவீனப்படுத்தவும் குடிமக்களை தவறாக வழிநடத்தவும் முயற்சிப்பதாக பாஜக எம்பி அனுராக் தாக்கூர் இன்று (வியாழக்கிழமை) குற்றம் சாட்டினார்.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய பா.ஜ.க.வின் அனுராக் தாகூர், “இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படும் அதே வேளையில், ராகுல் காந்தி ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதிலும், குடிமக்களை தவறாக வழிநடத்துவதிலும் முயற்சிக்கிறார். அண்டை நாடுகளான வங்கதேசம் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் ஏற்பட்ட ஒரு சூழ்நிலையை உருவாக்க முயற்சிப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்” என்றார்.
மேலும், “ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளின் அரசியலை சிலர் அலங்காரமாக ஆக்கியுள்ளனர். அதேநேரம் தேர்தல் ஆணையம் பதில் கேட்டால் அவர்கள் திரும்பி ஓடிவிடுகிறார்கள். மேலும், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யச் சொன்னால், அவர்கள் திரும்பிச் செல்கிறார்கள். பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சொல்வது ராகுல் காந்தியின் பழக்கமாகிவிட்டது” என்றார்.
இதையும் படிங்க: ராகுல் காந்தியின் வாக்காளர் நீக்கம் குற்றச்சாட்டு.. தேர்தல் ஆணையம் மறுப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com