Seema Singhs nomination Rejected: பீகாரில் பாரதிய ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பெயர் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் போஜ்புரி நடிகை ஆவார்.
Seema Singhs nomination Rejected: பீகாரில் பாரதிய ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பெயர் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் போஜ்புரி நடிகை ஆவார்.
Published on: October 18, 2025 at 11:24 pm
பாட்னா, அக்.18, 2025: பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மதுரா தொகுதியில் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) வேட்பாளர் சீமா சிங்கின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வெளியான தகவலில், சீமா சிங்கின் வேட்புமனுவில் உள்ள ஆவணங்களில் உள்ள முரண்பாடுகள் காரணமாக தேர்தல் அதிகாரி அவரது வேட்புமனுவை ரத்து செய்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீமா சிங், சிராக் பாஸ்வானின் கட்சியைச் சேர்ந்த முக்கிய வேட்பாளர்களில் அவர் ஒருவர் ஆவார்.
இதற்கிடையில், சீமா சிங்கின் வேட்புமனுக்கள் உட்பட மொத்தம் நான்கு வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது கண்டறியப்பட்ட தொழில்நுட்ப பிழைகள் காரணமாக நிராகரிக்கப்பட்டன என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீமா சிங்குடன், சுயேச்சை வேட்பாளர்களான அல்தாஃப் ஆலம் ராஜு மற்றும் விஷால் குமார் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதித்ய குமார் ஆகியோரின் வேட்புமனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
யார் இந்த சீமா சிங்?
சீமா சிங், பிரபல போஜ்புரி திரைப்பட நடிகை ஆவார், அவர் எல்ஜேபி (ஆர்வி) கட்சியில் சேர்ந்து போட்டியிட்டார். வேட்புமனுவின் போது, அவர் தனது கல்வித் தகுதிகள் மற்றும் சொத்துக்கள் பற்றிய விரிவான தகவல்களைச் சமர்ப்பித்து கவனம் ஈர்த்தார்.
அவர் தனது பிரமாணப் பத்திரத்தில், தனது கல்வித் தகுதியை ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பீகார் தேர்தல் வெற்றிக்கு ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.. பிரதமர் நரேந்திர மோடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com